ஒட்டிப்பிறந்த இரட்டையர்களின் தொகுப்பு (படங்கள் இணைப்பு)




கடவுளின் படைப்பில் இரட்டை குழந்தைகள் பிறப்பது என்பது அரிதான விடயம். அதிலும் ஒட்டிப்பிறக்கும் இரட்டைக்குழந்தைகள் பிறப்பது மிகவும் அரிதான விடயமே. அப்படி பிறந்தாலும் அவர்கள் நீண்ட காலம் வாழ்வதில்லை. அவற்றையும் மீறி வாழும் சில இரட்டையர்களை பற்றி இங்கு பார்ப்போம். 



1. இப்படத்தில் காணப்படும் அபூர்வ இரட்டைப்பெண் குழந்தைகள் ஒரே ஒரு இருதயத்துடன் பிறந்துள்ளனர். இச் சிறுமிகள் அமெரிக்காவின் அரிஸோனா மாநிலத்திலுள்ள குயின்கிறிக் நகரத்தைச் சேர்ந்த எம்மா மற்றும் டெய்லர்பெய்லி ஆவார். இவர்களுக்கு ஒரு இருதயம் மற்றும் ஒரு ஈரலும் உள்ளது. மார்பு எலும்பிலிருந்து தொப்புள்வரை இணைப்பைக் கொண்டுள்ளன. இவர்கள் மிகவும் ஆரோக்கியமாக உள்ளார்கள்.


2.ஸ்டீபன் மற்றும் டைலர்டெல்ப் ஆகிய இருவருமே தலையால் மட்டும் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள். இருவரும் 19 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.இவர்கள் அமெரிக்காவின் பென்சில்வெனியா மாநிலத்தின் தென்ஜேர்ஸி பகுதியைச் சேர்ந்தவர்கள்.





3.ஒட்டிப்பிறந்த இரட்டையர்களில் இவர்கள் சற்று வித்தியாசமானவர்கள். ஏனெனில் இந்த உலகத்திலேயே ஒரே ஒரு மூளையுடைய ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் இவர்கள் மாத்திரம் தான். ரரிஅனா மற்றும் கிறிஸ்ரா இருவரும் கனடாவில் வாழ்கின்றனர்.குறிப்பாக ரரிஅனாவின் கண்களால் கிறிஸ்ராவும் இறீஸ்ரவின் கண்களால் ரரிஅனாவும் காட்சிகளை காணமுடிகின்றது.








4.அயர்லாந்தின் ஈஸ்ட்கோர்க் நகரைச் சேர்ந்த ஹீசைன் மற்றும் ஹஸன்பென்ஹா ஆகியோரே இவர்கள். இவர்கள் பிறக்கும் போது ஒட்டிய நிலையில் பிறந்தாலும் தற்போது பிரிக்கப்பட்டு வாழ்ந்து வருகின்றனர்.

 





5.50 வயதையும் தாண்டி வாழ்ந்துகொண்டிருக்கும் இரட்டை சகோதர சகோதரிகளே இவர்கள். ஜார்ஜ் மற்றும் லோரி செப்பல் ஆகிய இருவர்கள் 50 வருடங்களின் முன் அமெரிக்காவின் பென்சில்வெனியா மாகாணத்தில் பிறந்தர்கள். இவர்கள் பிறக்கும் போது இருவருடைய தலையும் ஒட்டியே இருந்தது. அதோடு தலையின் முக்கிய நரம்புகளும் மூளையில் 30 சதவீதமும் இருவருக்கும் பொதுவாகவே காணப்படுகிறது.







6.வயிறு ஒட்டிய நிலையில் பிறந்த அபூர்வ குழந்தைகளே இவர்கள். டொமினிக்கன் குடியரசின் சாந்தோடோமிங்கோ நகரில் பிறந்த தெரெஸா மரியா மற்றும் மரியாதெரெஸாவே இவர்கள்.


7..உலகில் ஒட்டி பிறந்த ஏராளமானவர்கள் வாழ்ந்துகொண்டிருந்தாலும் அவர்களை விட அதிகமாக வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என சாதனை படைத்திருப்பவர்களே இவர்கள்.அமெரிக்காவை சேர்ந்த டோன் மற்றும் கல்யோன் ஆகிய இருவரும் அமெரிக்கவின் சென் எலிசபெத் வைத்தியசாலையிலே 28ம் திகதி ஒக்டோபர் மாதம் 1951ம் ஆண்டு பிறந்தார்கள்.இடுப்பு ஒட்டப்பட்ட நிலையில் பிறந்த இருவரும் இன்று வரை வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர்.




8.இரண்டு தலையும் ஒரு உடலுமாக வாழும் இரட்டையர்களே இவர்கள். appy மற்றும் brittany hensel ஆகிய இருவரும் மார்ச் மாதம் 7ம் திகதி 1990ம் ஆண்டு பிறந்தார்கள். இவர்கள் அமெரிக்காவில் உள்ள minnesota மாநிலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். இவர்களின் உடல் அமைப்பு சாதாரணமாக இல்லாமல் சிறிய மாற்றங்களை கொண்டுள்ளது. சில முக்கிய உறுப்புக்கள் பொதுவாகவும் சில உறுப்புக்கள் இரட்டிப்பாகவும் காணப்படுகின்றது.2 இருதயம், 4 நுரையீரல்,2 மார்பகங்கள், 2 பித்தப்பை,1 கல்லீரலுடன் கூடிய உடல் அமைப்பை கொண்டுள்ளனர்.







9.tatiana மற்றும் anastasia dogaru 2003ம் ஆண்டு தை மாதம் 5ம் திகதி இத்தாலியில் பிறந்தார்கள். இந்த இரட்டைப் பெண் சகோதரிகள் தலைகள் ஒட்டப்பட்ட நிலையிலையிலேயே பிறந்தனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :