பொத்துவில் நிருபர்-
அறுகம்பை பிரதேசத்திற்கு உல்லாசப் பயணம் வந்த கௌரவ அமைச்சர் குமார் வெல்கம அவர்களை பொத்துவில் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர், கௌரவ உறுப்பினர்கள் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பைஸல் காசிம் அவர்களின் உதவியுடன் பொத்துவில் பஸ்டிப்போவிற்கு அழைத்துச் சென்று காட்டியதன் பயனாக 02 சொகுசு பஸ் வண்டிகளை பொத்துவிலுக்கு தருவதாக கூறினர்.
இதற்கமைவாக முதலாவது சொகுசு பஸ்வண்டி 2014.06.27 வெள்ளிக்கிழமை கொழும்பில் வைத்து குறிப்பிட்ட அமைச்சர் அவர்களினால் பொத்துவில் பஸ் டிப்போ சாரதியிடமும், நடத்துநரிடமும் கையளிக்கப்பட்டது.
மேலும் குறித்த பஸ் வண்டியை பொத்துவிலுக்கு கொண்டுவருவதற்காக பொத்துவில் பஸ் டிப்போ பணத்தில் எரிபொருளும் நிரப்பியதன் பிற்பாடு, கௌரவ அமைச்சர் அதாஉல்லாவின் முயற்சியினால் அக்கரைபற்றிற்கு சொந்தமாக்க முயற்சிகள் எடுக்கப்பட்டது.
இதனை அறிந்த பொத்துவில் பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் ஒருவர் கௌரவ பிரதி அமைச்சர் சரத் வீரசேகர அவர்களை தொடர்பு கொண்டதன் பயனாக மேற்படி அதாஉல்லாவின் முயற்சியை முறியடிக்க முடிந்தது. இருந்தும் குறித்த பஸ்வண்டி பொத்துவிலுக்கும் இது வரை கிடைக்கப்பெறவில்லை. அது தற்பொழுது கொழும்பு புறக்கோட்டை பஸ்நிலையத்தில் தரித்து வைக்கப்பட்டுள்ளது.
'அக்கரைப்பற்றிற்கு இரண்டு கண் கெட்டாலும் பரவாயில்லை பொத்துவிலுக்கு ஒரு கண்ணாவது கெடவேண்டும் என்பதைபோல கௌரவ அமைச்சர் அதாஉல்லா அவர்களின் இம் முயற்சி காணப்படுகின்றது.'
அமைச்சர் அதாஉல்லாவின் பொத்துவில் சகாக்களே உங்களது ஐம்புலன்களும் அதஉல்லா அவர்களிடம் அடகுவைக்கப்பட்டுவிட்டதா????
கௌரவ அமைச்சர் உதுமாலெப்பை அவர்களே! பொத்துவிலின் பிரதிநிதியாக காட்ட முயற்சிக்கும் உங்களுக்கும் இது தெரியவில்லையா???
இச்செய்தி பொத்துவில் சம்மந்தப்பட்டவர்களால் அனுப்பி பிரசுரிக்கப்பட்டுள்ளதால் சகல பொறுப்பும் உரியவர்களையே சாரும்.
இச்செய்தி பொத்துவில் சம்மந்தப்பட்டவர்களால் அனுப்பி பிரசுரிக்கப்பட்டுள்ளதால் சகல பொறுப்பும் உரியவர்களையே சாரும்.
0 comments :
Post a Comment