அகர ஆயுதம் நடத்தும் தொடர் இலக்கியச் சந்திப்பும் கவியரங்கமும் எதிர்வரும் 28 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீத் தலைமையில் சாய்ந்தமருது கமு/மல்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
அகர ஆயுதம் தொடராக ஏற்பாடு செய்து வரும் இலக்கியச் சந்திப்புக்கும் உரையாடலுக்குமான பொது வெளியில் தென்கிழக்கு பல்கலைக்கழக தமிழ்த் துறை தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான றமீஸ் அப்துல்லாஹ் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
நிகழ்வில் சிறப்புக் கவியரங்கமும் இடம்பெறவுள்ளது. கவியரங்கத்திற்கு மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீத் தலைமை தாங்குகிறார். இக்கவியரங்கில் விரும்பிய கவிஞர்கள் பங்குபற்றலாம். விரும்பிய தலைப்பிலான உங்கள் கவிதை நான்கு நிமிடத்திற்கு உட்பட்டதாக இருத்தல் அவசியமாகும்.
உரையாடல் களத்தில் கவிஞர் நவாஸ் சௌபி மற்றும் பலர் சிறப்புரையாற்றுவார்கள். மேற்படி நிகழ்வில் இலக்கியவாதிகளுக்கிடையிலான பரஸ்பர அறிமுகம், படைப்புகளை வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் என்பவற்றோடு இலக்கியச் சுவை நிறைந்த பாடல்களும், கவிதைகளும் அரங்கேறவிருப்பது விசேட அம்சமாகும்.
இலக்கிய முரண்பாடுகளை மறந்து அனைவரும் இச் சந்திப்பில் பங்குபற்றலாம்.
இலக்கியவாதிகள், இலக்கிய ஆர்வலர்கள்,படைப்பாளிகள், இலக்கிய நேசர்கள், புத்திஜீவிகள், ரசிகர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்கலாம்.
வருகை தர விரும்புவோர் 0778486168,0772380958,0775896700 எனும் இலக்கங்கள் ஊடாக அழைத்து தங்களின் வருகையை உறுதிப்படுத்தலாம்.
ஏற்பாடு; அகர ஆயுதம் செயற்பாட்டாளர்கள்-