சமூக வளர்ச்சியில் இளைஞர்களின் பங்களிப்பும், கடமையும்!

முஹம்மட் அஸீம்-
ன்றைய உலகம் அதீத வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது என்றால் அதில் இளைஞர்களின் பங்கு மிக முக்கியமான தொன்றாகும். காரணம் எதையும் செய்து முடிக்க வேண்டும், எதையும் சாதிக்க வேண்டும் என்ற துடிப்பும் துணிவும் ஒரு இளைஞனிடம் இருப்பது தான்.

எனவே ஒரு சமூகத்தை வளர்ச்சி பாதையில் இழுத்து செல்ல வேண்டு மென்றால் அது அந்த சமூகத்தின் இளைஞர்கள் கையில் தான் இருக்கின்றது. அப்படிபட்ட இளைஞர்களை உருவாக்குவது இந்த சமூகத்தின் கடமையாகும்.

ஆனால் நமது சமூகத்தில் இன்றைய இளைஞர்களின் போக்கு மிகவும் கவலையளிப்பதாகவே உள்ளது. இதற்கு முக்கிய காரணம் அவர்களிடையே உண்மையான இஸ்லாமிய அறிவும் தேடலும் அற்றுப் போனமையாகும். அவர்கள் தமது இள‌மைப்பருவத்தை வீணான கேளிக்கைகளிலும் அர்த்தமற்ற செயற்பாடுகளிலும் பயனற்ற பொழுது போக்குகளிலும் செலவிடுகின்றனர்.

இன்று சில சிந்தனை உள்ள இளைஞர்களும் படித்து பட்டம் பெற்று கைநிரம்ப சம்பாதித்து வாழ்க்ககையில் செட்டிலாகி விட வேண்டும் என்ற எண்ணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். 

காரணம் அவர்களை வளர்க்கும் பெற்றோர்களும் நல்ல படித்து வெளி நாட்டிற்கு சென்று சம்பாதிக்க வேண்டும் என்ற சிந்தனையை படிக்கும் பருவத்திலேயே புகுத்தி விடுகின்றனர்.

இந்த சமூகத்தின் மீது அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களும் ஸஹாபாக்களும் எந்த அளவு அக்கறை உள்ளவர்களாக இருந்தார்கள் அந்த உணர்வு நம்மிடம் உள்ளதா? என்பதை இன்றைய இளைஞர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். 

சமூக சேவைகளிலேயே சிறந்தது மக்களை நரகிலிருந்து காப்பாற்றி சுவனத்திற்கு அழைத்துச் செல்லும் பணியாகும். இந்த சேவைக்காகத் தான் அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் தங்களின் இருபத்திமூன்று ஆண்டுகளின் வாழ்வை தியாகம் செய்தார்கள்.

இன்றைய சமூகசேவை இரண்டு விசயங்கள் மூலம் நடைபெற வேண்டும். ஒன்று உடல் உழைப்பின் மூலம் செய்பவை மற்றொன்று செல்வத்தின் மூலம் செய்பவை ஆகும். இன்று பலர் தங்களுக்கு உடல் வலிமை இருந்தும் செழிப்பான செல்வம் இருந்தும் சமூகத்தின் மீது கொஞ்சம் கூட சிந்தனை இல்லாமல் அலட்சியமாக இருக்கின்றார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்களின் பாசறையில் வார்த்தெடுக்கப்பட்ட நபித் தோழர்களில் ஒருவர் இந்த சமூகத்தில் அதிக இரக்கமுள்ளவர் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் ஆவார். 

கஷ்டப் படுபவரின் கஷ்டங்களை களைந்தவர். பாதிக்கப் பட்டவரின் உரிமைகளை வாங்கி கொடுத்தார்கள். எவருக்கும் தெரியாமல் தன் குடும்பத்தின் உறுப்பினர்களில் ஒருவருக்கு அவரின் குடும்பத்தின் வாழ்க்கை வசதியை செய்து கொடுத்துக் கொண்டு இருக்கின்றார்.

நமது நாட்டின் தேச தந்தைகளான மர்ஹூம் டி.பி ஜாயா, மர்ஹூம் பதயுதீன் மஹ்மூத், மர்ஹூம் ராசிக் பரீத், எம்.சி சித்தி லெப்பே ஆகியோர் தமது வாழ்க்கையை முஸ்லிம் சமுதாயத்துக்கே தியாகம் செய்தனர். இப்படி சமூக் சேவைகளில் நமது முன்னோர்களின் பங்கு மிக சிறப்பானது. இப்படிப்பட்ட சமூகத்தில் வந்த இன்றைய இளைஞர்கள் எதை நோக்கி பயணம் செய்கின்றார்கள்? இவர்களுக்கு சமூக சிந்தனையை ஏற்படுத்துவது நமது கடமையாகும்.

சமூக சேவைகள் ஏன் செய்ய வேண்டு மென்றால் நாம் சமூகத்தின் மீது அக்கறை கொண்டால் இறைவன் நம் மீது அக்கறை காட்டுகின்றான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அடியான் தன் சகோதரனின் உதவிக்காக முயற்சி எடுக்கும் போது இறைவனும் அடியானின் உதவிக்காக முயற்சிக்கின்றான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: முஸ்லிம் எனவே சமூக சேவைகள் செய்வோம் இறைவனின் உதவிகளைப் பெறுவோம்.
நன்றி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -