அபு அலா –
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸிரின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்டத்திலுள்ள ஊடகவியலாளர்களுக்கு சீட்ஸ் நிறுவனத்தின் அனுசரணையில் இலங்கை மெடி ரெப்ஸ் ஸ்ரீலங்கா நிறுவனத்தால் ரூபா 1 இலட்சம் பெறுமதியான நீரிழிவு நோயினை பரிசோதனை செய்யும் ஒரு தொகுதி கருவிகள் இலவசமாக வழங்கும் நிகழ்வு இன்று காலை (27) வழங்கி வைக்கப்பட்டது.
சீட்ஸ் நிறுவனத்தின் தலைவர் தேசகீரத்தி எம்.ஐ.எம்.றியாஸ் தலைமையில் அட்டாளைச்சேனை ஒஸ்ரா மெடிக்கல் கூட்டமண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸிர் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.
சமுகத்தில் நல்லவற்றை செய்யும் ஊடகவியலாளர்கள் இந்நாட்டில் நோயற்றவர்களாக வாழவேண்டும் என்பதற்காக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸிர் விடுத்த வேண்டுகோளுக்கமைவாக இலங்கை மெடி ரெப்ஸ் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜாபிர் சாலியினால் இக்கருவிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இக்கருவிகள் வழங்கி வைக்கும் முதற்கட்ட நிகழ்வுக்கு அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், நிந்தவூர், சாய்ந்தமருது, அக்கரைப்பற்று பிரதேச ஊடகவியலாளர்கள் 25 பேர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான நீரிழிவு நோய் பரிசோதனைக் கருவிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இக்கருவிகளை பெற்றுக்கொள்ளாத அம்பாறை மாவட்ட பிரதேசத்திலுள்ள ஏனைய ஊடகவியலாளர்களுக்கு அடுத்த கட்டமாக ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இக்குருவிகள் வழங்கி வைக்கப்பட்வுள்ளதாகவும் இலங்கை மெடி ரெப்ஸ் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜாபிர் சாலி தெரிவித்தார்.