கல்முனை வலயத்தில் நேற்று முன்தினம் (29.03.2016) நடைபெற்ற க.பொ.த. உயர்தர இரண்டாம் தவணை கணக்கீடு பகுதி – 02 வினாத்தாள் பரீட்சை வினாக்கள், தனியார் வகுப்புக்களில் நடைபெற்ற கையேட்டு வினாவுடன் ஒத்துக்காணப்படுகின்றன. (தொகை இரண்டு மடங்கால் அதிகரித்து காட்டப்பட்டுள்ளது)
இதனால் ஏனைய தனியார் வகுப்புகளுக்கு செல்லும் மாணவர்களும், அவர்களுடைய பெற்றார்களும் விசனமடைந்து குறித்த பாடசாலை நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர். இதனையிட்டு குறித்த பாடசாலை நிருவாகம் அப்பரீட்சையினை (கணக்கீடு) மீண்டும் நடாத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பரீட்சை நடைமுறைகளுக்கு முரணாக இந்தச் செயற்பாடு மாணவர்களின் கல்வி வளர்ச்சியை கேள்விக்குறியாக்குவதுடன், தனியார் டியூசன் வகுப்புகளின் போட்டிதன்மை மிகவும் மோசமான நிலைக்கு மாணவர்களை வழிநடாத்துதையே வெளிப்படுகின்றது?
அத்துடன் நேற்று நடைபெற்ற தரம் 09 முதலாம் தவணை பரீட்சை வினாத்தாள் 2016 என்பதற்கு பதிலாக 2015 என அச்சிடப்பட்டுள்ளமையும் மேலும் சில வினாத்தாள்களில் எழுத்து பிழைகள் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
தகவல் :பெற்றார்