கல்முனை வயலத்தில் பரீட்சை வினாத்தாள் மோசடி..?? (உரிய ஆசிரியர் விளக்கம்)

(மறுப்பு) 

விஷேட செய்தியாளர்- 


பொதுவாக மனித வாழ்கையில் போட்டி இருப்பது மிக முக்கியம் அப்போதுதான் தான் ஈடுபடுகின்ற தொழில் மேல் ஆர்வம் கூடும். குறிப்பாக போட்டிச்சந்தையில் தனி ஒரு மனிதனின் ஸ்திரமான வளர்ச்சி அதே உற்பத்தி மற்றும் சேவை வழங்குநர்களுக்கு பெரும் சவாலாக அமையவேண்டுமேயன்றி பொறாமையாக இருக்க கூடாது. குறிப்பாக இவற்றை மாணவர்களுக்கு கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு இருக்கேவே கூடாது. 

ஆனால், இன்று ஒரு வித்தியாசமான மனோப்பாங்கு இன்றைய ஆசிரிய சேவைகளில் உள்ளவர்களிடம் காணப்படுகின்றமை மிக வருந்த தக்கதாகும். குறிப்பாக உயர்தர பாடங்களை நடாத்துகின்ற பிரத்தியோக ஆசிரியர்களிடம் இது தலை தூக்கி ஆடுவது வேடிக்கையாக உள்ளது. அந்த வகையில் தான் கடந்த 2016.03. ம் திகதி கல்முனை கல்வி வலயத்திற்குப்பட்ட  நிந்தவூர் அல்/ அஷ்ரக் தேசிய பாடசாலையில் 2017ம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கு தோற்றும் வர்த்தகபிரிவு  மாணவர்களுக்கான வருடாந்த தவணைப்பரீட்சையின் கணக்கீட்டு பாடம்  இடம்பெற்றது. 

இப்பரீட்சையில் கடந்த 24 வருடகாலமாக கணக்கீட்டு துறையில் அகில இலங்கை ரீதியில் பிரபல்யமான திரு ஐ.எல்.ஏ. சலாம் ஆசிரியரால் குறித்த பரீட்சை வினப்பத்திரம் தொகுக்கப்பட்டதாகவும் அப்பரீட்சை வினப்பத்திரம் ஏற்கனவே அவ்வாசிரியரால் வெளியிடப்பட்டதாகவும் அதற்கான ஆதாரங்கள் கை வசம் இருப்பதாகவும் பாடசாலை சமூகம் குறிப்பிட்டுள்ளது. இது பற்றிய செய்தியும் எமது இம்போட் மிரர் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. 

இது தொடர்பாக குறித்த ஆசிரியரிடம் நாங்கள் வினவிய போது; 

தொகுக்கப்பட்ட வினாக்கள் யாவும் கடந்த கால அரசாங்க பரீட்சை வினாப்பத்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவையும் அவற்றை தழுவி எடுக்கப்பட்ட வினாக்களாகும் என ஆதார பூர்வமாக நிருபித்தார். 

அது மட்டுமல்லாது பாடசாலை சமூகம் கூறும் காரணம் நகைப்புக்குரியதும் வேடிக்கயானதுமாகும் என குறிப்பிட்டார். இன்னும் தான் இது தொடர்பாக தலையிட்ட குறுப்பிட்ட ஆசிரியருக்கு இவ்வினாத்தாலை செய்யுமாறு பகிரங்க அழைப்பு விடுப்பதாகவும் கூறினார். 

அதே போல் குறித்த பாடசாலை மாணவர்களுக்கு இரண்டு தடவை குறிப்பிட்ட கணக்கீட்டு  பரீட்சை நடாத்தப்பட்டது என்பதையும் தெரிவிக்க விரும்புகுறோம். இப்பிரச்சினைக்கு மூல காரணமான ஒரு ஆசிரியர் இருப்பதாகவும் அவர் இப்பிரச்சினையில் வீணாக தலையிட்டிருப்பதர்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 

மேலும், இது என் நற்பெயர்க்கு களங்கம் விளைவிக்கும் ஒரு காய் நகர்த்தலாகவே தான் பார்ப்பதாகவும் இது தொடர்பான சட்டப்பிரச்சினையை எதிர் கொள்ள அனைவரும் தயாராக இருக்குமாறும் அவர் தெரிவித்தார்.

எது எப்படி இருந்த போதிலும் ஒரு தனி மனித வளர்ச்சியில் நீங்கள் ஒரு பங்காளியாக இருக்கா விட்டாலும் உபத்திரம் செய்யும் ஒரு மனிதனாக இருக்கே வேண்டாம் என்பது தான் எங்கள் வேண்டுள். உங்கள் போட்டிக்கும் பொறாமைக்கும் படிக்கும் மாணவர்களை பகடைக்காய்களாக பயன்படுத்த  வேண்டாம் என்பது தான் எங்கள் வேண்டுகோள்.

குறித்த செய்தியினை பார்வையிட.. 
அவர் எழுதிய கடிதம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -