ஐ.எல்.ஏ. சலாம் ஆசிரியரின் மறுப்பறிக்கைக்கு - நிந்தவூர் அல்-அஷ்றக் பாடசாலை ஆசிரியர் றசாக் விளக்கம்

கல்முனை வலயத்தில் கணக்கீட்டுப்பாட பரீட்சை வினாத்தாள் மோசடி தொடர்பாக பகுதித் தலைவர் ஏ.எல்.ஏ. றசாக் அவர்களின் அறிக்கை :

ம்போர்ட் மிரர் செய்திச்சேவையில் பெற்றோர்களால் வெளியிடப்பட்ட கல்முனை வலய பரீட்சை வினாத்தாள் மோசடி தொடர்பாக செய்திக்கு மறுப்பறிக்கையினை உரிய தனியார் வகுப்பில் கற்பிக்கும் ஐ.எல்.ஏ. சலாம் அவர்கள் 02.04.2016 இல் வெளியிட்டிருந்தார். 

இது தொடர்பாக கமு/அல்-அஷ்றக் தேசிய பாடசாலையில் 32 வருட கணக்கீட்டுப்பாட கற்பித்தல் அனுபவமும், பொதுப்பரீட்சை வினாத்தாள் திருத்துவதில் 30 வருட அனுபவமும். வலய மட்ட மேற்பார்வைக் குழுவில் 10 வருடங்களுக்கும் மேலான அனுபவமும் உடைய அல்-ஹாஜ் ஏ.எல்.ஏ. றசாக் ஆசிரியர் வழங்கிய அறிக்கை பின்வருமாறு:

இன்று பாடசாலைகள் எதிர்நோக்கும் பல்வேறு சவால்களுள் தனியார் வகுப்புகளினால் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினையும் ஒன்றாகும். தனியார் வகுப்புகள் மாணவர்களுக்கு மேலதிக பயிற்சிகளை வழங்கினாலும் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்துகின்றது. ஆனால் அத்தாக்கங்கள் மாணவர்கள் மத்தியில் பிழையான வழிநடாத்தல்களை ஏற்படுத்தக்கூடாது என்பதில் நாம் மிகவும் கவனமாகவுள்ளோம்.

முதலில் என்மீதான வினாக்களுக்கு விடையளிக்க விளைகின்றேன்.

இருப்புச்சீராக்கம், முற்பணம், சென்மதி, அறவிடமுடியாக்கடன் போன்ற எல்லா தலைப்புகளிலும் பொதுப்பரீட்சை வினாக்கள் வருகின்றது அது பரீட்சை வினாத்தாள் கட்டமைப்புக்கு உட்பட்டவாறே இடம்பெறுகின்றது. ஆனால் கடந்த வருடங்களில் வந்த அதே வினாவோ, அல்லது தொகைகளை இரட்டிப்பாக்கியோ, ஒரு மடங்கால் குறைத்தோ வருவதில்லை. தரவுகளை குறைத்தோ மாற்றியோ வருவதில்லை. ஒவ்வொரு வருடமும் புதிய கணக்குகளே வரும் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். எனவே இவ்வினா நகைப்பிற்கிடமானது.

உயர்தரப்பரீட்சை வினாத்தாளின் கடந்த கால வினாக்களை ஒவ்வொரு ஆசிரியரும் கற்பிக்க வேண்டும்தான் அதனை மறுக்கவில்லை. கணக்கீட்டு பாட மாணவர்களுக்கு பயிற்சி முக்கியம். அதற்காக தவணைப்பரீட்சை வினாத்தாள்களில் பொதுப்பரீட்சை வினாக்களை அவ்வாறே அச்சிடுவதும், அதே கணக்கை தொகையை மாற்றி அச்சிடுவதும் உரிய பரீட்சை வினாத்தாள் தொகுப்பாசிரியரின் வினாவரட்சியையும், வினாவொன்றை சுயமாக உருவாக்கும் திறன் இல்லாத தன்மையினையும் வெளிப்படுத்துவதோடு, மாணவர்களின் புதிய தேடல்களுக்கு முட்டுக்கட்டையிட்டு பொதுப்பரீட்சையின் புதிய வினாக்களுக்கு விடையளிக்கும் திறனையும் குறைக்க வழிகோலும். கணக்கீட்டில் ஒத்தகருத்துள்ள சொற்பிரயோகங்கள் உமக்கு தெரியாமல் உள்ளதும் கவலைக்கிடமானது. எனவே மாவர்களுக்கு மாதிரி வினாக்களே அவசியம்.

நீர் சுயமாக வினாத்தயாரிக்க முடியாமல், சிங்க மொழிமூல கணக்கீட்டு வினாத்தாள்களை காரைதீவில் பிரசித்தி பெற்ற ஓரு ஆசிரியர் மூலமாக மொழி பெயர்த்து அந்த மொழி பெயர்ப்பினையே கற்பித்தல் அனுபவமாகக் கொண்டு நாடகமாடுவது உனக்கு கற்றுத்தந்த ஆசிரியர் என்ற ரீதியில் எனக்கு தெரியாதா?

ஆதனம் பொறி மற்றும் உபகரணம் - இவ்வட்டவணை தனிவியாபார நிதிக் கூற்றுக்களில் அவ்வாறு காட்டப்படுவது அவசியமில்லை. ஆனால் கம்பனி நிதிக் கூற்றுக்களில்தான் உயர்தர பொதுப்பரீட்சை வினாக்களில் பல தடவைகள் வந்துள்ளது என்பது எனக்கு தெரியாமல் இல்லை. உமக்குத்தான் தெரியாமல் உள்ளது. காரணம் பட்டச்சான்றிதல் இல்லாத ஒருவருக்கு இது தெரியாது. கணக்கீட்டு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களே அறிவர். 

அவ்வாறாயின் தனிவியாபார நிதிக் கூற்றுக்களில் தவணைப்பரீட்சைகளில் இதுவரை இவ்வட்டவணைக் கூற்று நியமம் 16ன் படி கூறப்பட்டுள்ளதா? இது தெரியாதா? இதுதான் உமது கற்பித்தல் அனுபவமா? அதாவது சட்ட ஆளுமையுள்ள நிறுவனத்துக்கும் சட்ட ஆளுமையற்ற நிறுவனத்துக்கும் வேறுபாடு உமக்குத் தெரியாதா? தனி வியாபார நிறுவனத்தின் நிதிக் கூற்றுக்கள் சட்ட ஆளுமையற்ற நிறுவனத்தினால் தயாரிக்கப்படுவதினால் அக்கூற்று அவசியமில்லை. 

ஆனால் சட்ட ஆளுமையுள்ள நிறுவனத்துக்கு இக்கூற்று அவசியமானதால் நிமயத்தில் கம்பனி நிதிக்கூற்றுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால்தான் பொதுப்பரீட்சையில் கம்பனி நிதிக் கூற்றுக்களில் அது காட்டப்படுகின்றது. இது உமக்குத் தெரியாதா? நீர் எவ்வாறு மாணவர்களுக்கு வழிகாட்ட முடியும்?

புரனைநடiநெ இரண்டாம் வருட 5ம் தவணைப்பரீட்சை 5வது வினா தொடர்பாக மாணவர்கள் பாடசாலைக்கு எவ்விதமான முறைப்பாடுகளையும் செய்யவில்லை. அதனால் அது சரியென்று நாம் ஏற்றுக்கொள்ளவும் முடியாது. இதுவும் அவரது கணக்கீடு பாடம் தொடர்பான வினா வரட்சியை காட்டுகின்றது. ஐ.எல்.ஏ. சலாம் 24 வருட அனுவமிக்கவரென்றால் ஏன் பொதுப்பரீட்சை வினாவை அதில் அச்சிடவேண்டும்? சுயமான அதே வடிவான கணக்கொன்றை தயாரித்து வழங்கியிருக்கலாம்தானே? 

சிறந்த ஆசிரியர் அல்ல என்பதையும், இலாப நோக்கத்துடன் செயற்படுவதையும் நீங்களே ஏற்றுக்கொள்கிறீர்கள். அத்துடன் உங்கள் கணக்குப்படி 100 மணித்தியாலத்திற்கு ரூபா.2400 வாங்குவதாகவும், 12 மணித்தியாலத்திற்கு ரூபா 500 வாங்குவதாகவும் குறிப்பிடப்பட்டதற்கமைவாக, 12 மணித்தியாலத்திற்கு ரூபா 12 ஓ 24ஃ- ஸ்ரீ 288 மட்டுமே வாங்கவேண்டும். ஆனால் நீங்கள் ரூ. 500 வாங்குகின்றீர்கள், கையேட்டுக்குரிய பணம் தவிர்த்து. ஆகவே நீங்கள் மேலதிகமாக ரூ.212 ஐ அபகரித்துக்கொள்கிறீர். இதில் புரியும் உங்கள் இலாப நோக்கம்!!!!! இலாப நோக்கமற்ற கல்வி நிலையங்களை சுட்டிக்காட்ட முடியுமா?

யாழ்ப்பாணத்தில் 1 பாடத்துக்கு ரூ.800 செலுத்தி, மாதம் 30 நாட்களிலும் தினமும் தலா 1.5 மணித்தியாலயம் பிரத்தியேக வகுப்பு நடைபெறுகின்றது. இதன்படி ஒரு மணித்தியாலத்திற்கு ரூ.17.78 சதம் செலுத்தப்படுகின்றது. ரூபா. 1000 செலுத்தும் பாடத்துக்கு ஒரு மணித்தியாலத்துக்கு ரூ.22.22 சதம் செலுத்தப்படுகின்றது. ஆகவே, உங்களது நிறுவனத்தை விட யாழ்ப்பாண கல்வி நிலையம் மாணவர்களுக்கு இலாபகரமானது. இதிலிருந்து விளங்கும் உங்கள் பொய்!!!!! பெற்றார்களே கொஞ்சம் கவனியுங்கள்.

யு சித்தி பெறுவது என்பதில் மாணவர் ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட ஆளுமை, மீத்திறன் என்பன முக்கியமானவையாகும். கெட்டித்தனமுள்ள மாணவர் ஒருவர் பிரத்தியேக பாடத்துக்குச் சென்றுதான் யு சித்தி பெறவேண்டும் என்ற அவசியமில்லை. 

அவ்வாறாயின் உங்கள் வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களும் 100 வீதம் A சித்தி ஏன் பெறவில்லை. இது யாருடைய குறைபாடு? கூடுதலாக 3 A பெற்றால் தனியார் வகுப்பு என மார்தட்டுவதும், 3 A குறைந்தால் மௌனம் காப்பதும் ஏன்? நீர் ஏன் இந்த வருடம் பெரிய பெனர் அடித்து பாடசாலைக்கு முன்னால் வைக்கவில்லை? இது உமது கற்பித்தலின் குறைபாடே எனச் சொல்ல எமக்கு முடியாதா?

அதே வேளை உங்களிடம் கற்று 3A எடுக்காது S,F  பெறும் மாணவர்களை நீங்கள் பொறுப்பேற்பதில்லை. அதற்கு பாடசாலையை மட்டும் குறை கூறுகின்றீர்கள். இத்தனைக்கும் மாணவர்கள் குறைந்தது 90 வீதம் பாடசாலைக்கு வரவு இல்லாவிட்டாலும் 90 வீதத்துக்கு அதிகமாக டியூட்ரிக்கு சென்று வருகின்றார்கள் என்பதை மறுக்க முடியுமா? அல் - அஷ்றக் தேசிய பாடசாலை கிழக்கு மாகாணத்தில் தமிழ் மொழி மூலம் வர்த்தகப் பிரிவுக்கு மிகவும் பெயர்பெற்ற, பிரபல்யம் பெற்ற பாடசாலையாக திகழ்கின்றது. அதிகமான மாணவர்களையும் பல்கலைக்கழகத்துக்கு அனுப்புகின்றது. இம்மாணவர்களில் உங்களிடம் கல்வி கற்காத மாணவர்கள் அதிகம் உண்டு என்பதை அறிவீர்களா? 

உமது கல்வி நிலையும் வருதற்கு முன் 1, 2, தொடக்கம் 7 சுயமெ வரை இப்பாடசாலை பெற்றது மட்டுமல்லாமல் அதிக மாணவர்களையும் இப்பாடசாலை பல்கலைக்கழகத்துக்கு அனுப்பியது. அதற்கான ஆதாரங்களை பாடசாலையில் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் இன்று உமது பிரத்தியேக கல்வி நிலையம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அத்தொகை குறைவடைந்துள்ளது. இயல்பான கெட்டித்தனமுள்ள மாணவர்களுக்கு கற்பித்துவிட்டு நீர் மார்தட்டுகின்றீர். ஏனைய மாணவர்களை மறைத்துவிட முனைகின்றீர். இதுவே உமது இயலாமையை வெளிக்காட்டுகின்றது.

மேலும் எமது பாடசாலையில் கடந்தவருடம் வர்த்தகப்பிரிவில் 16 பெண்பிள்ளைகளில் 8 பேர் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகவுள்ள நிலையில், 

கல்முனை மஹ்மூத் பாலிகாவில் 50 மேற்பட்ட மாணவிகளுக்கு முழு நேரமும் கணக்கீடு கற்பித்து 3 பேருருக்கும் அதிகமாக மாணவிகள் பல்கலைக்கழகம் செல்ல முடியவில்லை. இதுதான் உன்னுடைய முழுநேரத்தில் கற்பித்தலின் பெறுபேறா? இதில்தான் உம்முடைய தனிப்பட்ட கற்பித்தல் செயற்பாட்டின் பயன் என்பதை பெற்றோர்கள் அறிந்துகொள்வார்கள். 

உங்கள் தனிப்பட்ட கற்பித்தல் திறன் இதுதானா? பெற்றார்களே! ஆசிரியர்களே! இவரிடம் தனிப்பட்ட கற்பித்தலுக்கான ஆதாரங்களை வினவிக்கொள்ளுங்கள். அவ்வாறாயின் அப்பாடசாலையில் உமது திறமையைப் பயன்படுத்தி அதிக மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்பிய தரவுகளை வெளியிட முடியுமா? கெட்டிக்கார மாணவருக்கு கற்பித்து சித்தியடைய செய்வது திறமையல்ல கெட்டித்தனம் குறைந்த மாணவருக்கு கற்பித்து சித்திபெறச் செய்வதே திறமை.

மாணவர் ஒருவரின் கற்றல் திறனில் பாடசாலையின் பங்களிப்பை இலங்கை முழுவதிலுமுள்ள எவராலும் மறுக்க முடியுமா? இப்பாடசாலையில் இருந்து ஏ.எல்.ஏ. றசாக் ஆசிரியரிடம் பயின்று அவரது வழிகாட்டலில் வெற்றி பெற்ற மாணவர்கள் நாடுபூராவும் உயர்நிலையில் உள்ளதை மறுக்கமுடியுமா? நீர் கற்பதற்கு முன் இப்பாடசாலையை மட்டும் நம்பி கற்ற எத்தனையோ மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களாகவும், பீடாதிபதிகளாகவும், விரிவுரையாளர்களாவும், கணக்காளர்களாகவும் இன்னும் பல்வேறு அரச, தனியார் துறைகளில் சேவையாற்றுவது உமக்குத் தெரியுமா? இதை இந்த சமூகம் அறியும்.


2000 ம் ஆண்டில் கணக்கீட்டு பாடம் பொதுப்பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு வழிகாட்டும்போது நீர் புதியபாடத்திட்ட முறையில் பரீட்சை எழுத திணித்தமையினால் 5 மாணவர்கள் பல்கலைக்கழகம் புகும் வாய்ப்பினை இழந்தமையை, நான் உம்மை வீட்டிற்கு அழைத்து சுட்டிக்காட்டியதை மறுக்க முடியுமா? இதற்கு காரணம் பொதுப்பரீட்சை விடைப்பத்திர புள்ளியிடல் அனுபவமின்மையே காரணம் என்பதை இங்கு சுட்டிக்காட்டுகின்றேன்.

இன்னும், 29.03.2016 இல் நடைபெற்ற முதலாம் வருட இரண்டாம்தவணை வினாத்தாளே இங்கு பேசுபொருளாகும். அவ்வினாத்தாளில் உள்ள முதலாவது வினா பொதுப்பரீட்சையில் வந்த வினாவென்று கூறுகின்றீர். இவ்வாறு தனிவியாபார நிதிக் கூற்று ஒன்று பொதுப்பரீட்சைக்கு வருவதில்லை. எனவே, குறித்த வினா எந்த வருடத்தில் பொதுப்பரீட்சையில் வந்துள்ளது என்பதை ஆதாரத்துடன் நிருபிக்க முடியுமா? ஆனால் வருவது கம்பனி நிதிக்கூற்று கணக்கிலேயேதான். அனுபவம் மிக்க ஆசிரியருக்கே இது தெரியும். 

எமது குற்றச்சாட்டு,

தரம் 12 மாணவர்களுக்கு உமது கல்வி நிலையத்தில் 8 வது தேர்ச்சி அலகான நிதிக்கூற்றுக்கள் இன்னும் கற்பிக்கப்படவில்லை என மாணவர்கள் தெரிவிக்கும் நிலையில், பரீட்சை நடைபெறுவதற்கு அண்மித்த நாட்களில் தனிவியாபார நிதிக்கூற்று கணக்கையும், அதிலுள்ள சீராக்கப் பதிவுகளையும் உமது கல்வி நிலையத்தில் மாணவர்களுக்கு கற்பித்து பயிற்சியளித்துள்ளதை ஏனைய மாணவர்கள் மூலம் அறிந்துகொண்டேன். அவர்களும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

சுட்டிக்காட்டப்படவேண்டிய விடயம் யாதெனில், புரனைநடiநெ க்கு நீரே இம்முறை தரம் 12, 13 பரீட்சை கணக்கீட்டுப்பாட வினாத்தாள்களை தயாரித்துக்கொடுத்துள்ளீர். அவ்வாறு தயாரித்து அனுப்பிய வினாத்தாளில் உள்ள அதே முதலாம் வினாவையே தொகையை இரட்டிப்பாக்கி மாற்றி, இங்கு உமது கல்வி நிலையத்தில் மாணவர்களுக்கு கையேடாக வழங்கி செய்து காட்டியுள்ளீர். இதைத்தான் பரீட்சை விதிகளுக்கு முரணான மோசடி என நாம் குறிப்பிடுகின்றோம். இதனை உம்மால் மறுக்கமுடியாது.

உதாரணமாக,  வினாத்தாளில், 01.04.2015 இல் சரக்கிருப்பு ......1500 000 வை உமது பெயர் பொறிக்கப்பட்ட கையேட்டில் 01.04.2015 இல் சரக்கிருப்பு ......3000 000 என குறிப்பிட்டுள்ளீர். சக தரவுகளும் அவ்வாறே மாற்றப்பட்டுள்ளது. இதனை இத்தோடு இணைக்கப்பட்டுள்ள இரண்டு வினாப்பத்திரங்களை ஒப்பிட்டு நோக்குங்கள். தெளிவு கிடைக்கும். ஆனால் உமது அறிக்கையில் இவ்வினாப்பத்திரத்தை Guideline க்கு கொடுத்ததை நீரே தயாரித்து கொடுத்ததை ஏன் மறைக்க முற்பட்டீர்?

எனவே, இவ்வாறான செயற்பாடு மேற்கொள்ளப்பட்டமை உமது கல்வி நிலையத்தில் பயிலும் மாணவர்கள் கூடுதலான புள்ளிகள் பெறுவதுபோல் காட்டி ஏனைய மாணவர்களை கவர்வதே! இப்பரீட்சை வினாத்தாளை வஞ்சகமான முறையில் பரீட்சை நடைபெறும் முன்னரே வெளியிட்டமை எந்தவகையில் நியாயம்? 

இதற்கு தக்க சட்டநடவடிக்கை எடுக்க பாடசாலை நிருவாகம் ஏற்பாடுகளை செய்துவருகின்றது. இப்பரீட்சை வினாத்தாள் எடுக்கும் பிரத்தியேக நிறுவனமான Guideline     இத்தவறை ஏற்றுக்கொண்டுள்ளனர். மேலும் Guideline     நிலையத்தில் இம்முறை பரீட்சை வினாத்தாள் எடுக்குமாறு வலயக்கல்வி அலுவலகத்தில் உள்ள உயரதிகாரி ஒருவரினால் பல தடவைகள் வற்றுபுத்தப்பட்டது. இதன்காரணமாகவே வலயக் கல்வி அலுவலகத்தின் அறிவுரைக்கு ஏற்பவே எமது பாடசாலை இம்முறை புரனைநடiநெ இடம் இருந்து வினாப்பத்திரம் எடுக்க தீர்மானித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனது வினா என்னவென்றால், இந்த நிறுவனத்துக்கு பாடசாலைகளில் கற்பிக்கும் அனுபவமுள்ள, பொதுப்பரீட்சை வினாத்தாள் திருத்தும் அனுபவமுள்ள ஆசிரியர் ஒருவரிடமாவது ஏன் வினாத்தாள் தொகுத்து பெற முடியாமல் போனது என்பதுதான்? அனுவம் இல்லாத, ஆசிரிய வாண்மைத்துவம் இல்லாத தனியார் கல்வி நிலையத்தைச் சேர்ந்த ஒருவரிடம் அவ்வாறு வினாத்தாளை பெற்றதால்தான் இம்மோசடி இடம்பெற்றுள்ளது.

இதை மறைக்க முனைவது முழுப்பூசணிக்காயை சோற்றுப்பீங்கானுக்குள் மறைக்க முற்படுவது போன்றதாகும்.

இதற்கு முன் நாம் நடாத்தும் பரீட்சை வினாத்தாள்கள் யாழ் தொண்டமானாறு, கொழும்பு வர்த்தக வளநிலையம், அக்கரைப்பற்று சீட்ஸ், மட்டக்களப்பு கல்வி வளநிலையம் போன்றவற்றுக்குரியதாகும். அதில் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட்டதேயில்லை. மாணவர்கள் முறைப்பட்டதுமில்லை.

மேலும், இம்மோசடி கண்டுபிடிக்கப்பட்டதும், நீர் நடந்துகொண்ட முறை உமது பண்பாடுகளை வெளிப்படுத்துகின்றது. பரீட்சை வினாத்தாள் மோசடியினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் செய்த முறைப்பாட்டை எமது பாடசாலை முகாமைத்துவ குழு விசாரித்து உண்மையென அறிந்து, மீண்டும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கணக்கீடு மீள்பரீட்சை இடம்பெறும் என அறிவித்ததை நீர் தெரிந்துகொண்டு, உம்மிடம் கல்வி பயிலும் மாணவர்களை அழைத்து (31.03.2016) நீங்கள் அல்-அஷ்றக்கில் படிப்பவர்கள் இங்கு பாடத்துக்கு வரக்கூடாது என்றும். 

நீங்கள் இங்கு வருவதாக இருந்தால் மீள்பரீட்சையை பகிஷ்கரிக்கவேண்டும் அத்துடன் 29.03.2016 இல் நடைபெற்ற புரனைநடiநெ க்கு என்னால் தயாரிக்க்பபட்ட கணக்கீடு பாட வினாக்களுக்குரிய விடைப்பத்திரத்தை வாங்கிக்கொண்டு வந்து என்னிடம் தரவேண்டும் என்று அச்சுறுத்தியமை. 

இதன்போது உம்மால் மாணவர்கள் மூளைச்சலவை செய்யப்பட்ட நிலையில் பகுதித்தலைவர், ஆசிரியர்களுடன் ஒழுக்கயீனமாக நடந்துகொள்ள தூண்டியமையும் கண்டிக்கத்தக்க விடயமாகும்.

அவ்வாறு மீள்பரீட்சைக்கு செல்வபவர்கள் அவ்வினாக்களுக்கு விடையளிக்காது இருந்துவிட்டு வெற்று விடைத்தாளை கொடுத்துவிட்டு வரவேண்டும் என்று மாணவர்களை வற்புறுத்தியுள்ளீர். இவ்விடயத்தை உமது டியூட்டரியில் கல்வி கற்க வரும் மாணவர்கள் மூலமாக நான் அறிந்துகொண்டு மீள்பரீட்சை நடைபெறும் அன்று பரீட்சையை ஒழுங்காக விடையளிக்காவிட்டால் பாடசாலை நிருவாகம் ஒழுக்காற்று நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று வேண்டியதனால் பல மாணவர்கள் பரீட்சை எழுதினர். அவ்வாறு செயற்படாத மாணவர்கள் கண்டுபிடிக்கப்பபட்டு பாடசாலை நிருவாகத்தின் விசாரணைக்கு உட்டுப்பத்தப்படுவார்கள் என்று என்னால அறிவுறுத்தப்பட்டது

உம்மால் நடாத்தப்பட்ட (2016.04.02) நடாத்தப்பட்ட பெற்றார் கூட்டத்தில் பிழையான பின்னூட்டல்கள் செய்யப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது. மேலும் அக்கூட்டத்தில் நீர்தான் Guideline    வினாத்தாள் எடுத்ததையும் மறைத்துள்ளீர். பெற்றார்களை வேறுவகையில் திசைதிருப்பவும் முற்பட்டுள்ளீர்.

தவிர உம்மிடம் பிரத்தியேக வகுப்புக்கு மாணவர்களை கட்டாயப்படுத்தி, அம்மாணவர்கள் கட்டாயமாக உமது கல்வி நிலையத்துக்கு மட்டுமே வரவேண்டும் எனவும், இம்மாணவர்கள் வேறு கல்வி நிலையத்துக்கு விரும்பும் பாடங்களுக்கு செல்லமுடியாது என்றும், இங்கு விநியோகிக்கப்படும் கையேடுகளை வேறு மாணவர்களுக்கு வழங்கக்கூடாது என்றும் சத்தியப்பிரமாணம் எடுப்பதும் உமது குறுகிய மனப்பான்மையை வெளிப்படுத்தவில்லையா? இதை உன்னால் மறுக்க முடியுமா? 

அதேபோல் வேறு கல்வி நிலையத்தில் இருந்து மாணவர்கள் ஒரு சில பாடங்களுக்கு இங்கு வரமுடியாது என்று தடைவிதிப்பதும் எவ்வகையில் நியாயம்? இதுதான் உமது சமூகசேவை மனப்பான்மையும், இலாபநோக்கமற்ற கல்விச்சேவையுமா? பெற்றோர்களே சிந்தியுங்கள்!!!!

மேலும் கடந்த பல வருடங்களாக பாடசாலை நேரத்தில் தனியார் வகுப்புகளை நீர் நடாத்தி பாடசாலை ஒழுக்க விதிக்கு முரணாக மாணவர்களை வழிநடாத்தியமையும், மாணவர்களை தூண்டி பிரச்;சினைகளை பாடசாலையில் உருவாக்கியதுடன், குறிப்பிட்ட ஆசிரியர்களுக்கு எதிராகவும் பிரச்சாரங்கள் செய்வதும் உமது பண்பினை வெளிப்படுத்துகின்றது. எவ்வாறிருந்தும் அவற்றை நாம் மாணவர் நலனுக்காக சகித்துக்கொண்டோம்.

மேலும், உமது கல்வி நிலையத்தில் பயிலும் மாணவ, மாணவியர்கள் காதல் விவகாரங்களில் ஈடுபட்டு பிடிபட்டு நாம் விசாரணை செய்து அப்பிரச்சினைகளை இரகசியமாக தீர்த்துவைத்ததை உம்மால் மறுக்கமுடியுமா? எனவே, உமது கல்வி நிலையத்தில் இடம் பெறும் பல நிகழ்வுகளை நாம் பெற்றாருக்கு தெரியப்படுத்தி பிரச்சினைகளை பெரிதாக வளர்க்க விரும்பவில்லை இதெல்லாம் மாணவர் நலனுக்காகத்தான்.

எனவே, இங்கு எமக்கு எவ்வித தனிப்பட்ட குரோதங்களும் யாருடனும் இல்லை. ஐ.எல்.ஏ. சலாம் கூட என்னிடம் கற்ற மாணவர்தான். அதற்காக அவரது பிழையான செயற்பாடுகளை இப்பாடசாலை சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமும் தேவையும் இல்லை. ஆனாலும் பல சந்தர்ப்பங்களில் சுமூகமாக பேசியும் அறிவுரைகள் மூலமும் பிரச்சினைகள் என்னால் தவிர்க்கப்பட்டுள்ளது. இவ்வினாத்தாள் விடயத்தில் மட்டும் நீங்கள் ஏன் என்னிடம் நேரடியாக தொடர்புகொள்ளவில்லை என்பது மர்மமாகவேயுள்ளது? 

இவ்விடயம் உன்னால், உண்மை மறைக்கப்பட்டு, பகிரங்கப்படுத்தப்பட்டதால்தான் நானும் உண்மையை பகிரங்கப்படுத்தி அறிக்கையாக சகல விடயங்களையும் பெற்றார்களுக்கும், உமக்கும், உயரதிகாரிகளுக்கும், சமூகத்துக்கும், நாட்டுக்கும் வெளிப்படுத்துகின்றேன். இதில் பொய் ஏதும் இருந்தால் இறைவன் என்னை தண்டிக்கட்டும். அல்லாஹ் மிகப்பெரியவன். நல்லதை சிந்தித்து நல்லதை செய்துள்ளேன் இறைவன் என்னுடன் இருக்கின்றான் என்ற உள்ளச்சத்துடன் இவ்வறிக்கையை வெளிப்படுத்தியுள்ளேன்.

தரம் 12 (1ம் வினா)

இதுதான் ஐ.எல்.ஏ. சலாம் இனால் தயாரிக்கப்பட்டு Guideline க்கு வழங்கப்பட்ட குறித்த வினா அடங்கிய வினாப்பத்திரம்

இதுதான் ஐ.எல்.ஏ. சலாம் இனால் தயாரிக்கப்பட்டு டியூட்டரியில் செய்துகாட்டப்பட்டு பயிற்றுவிக்கப்பட்ட குறித்த வினா அடங்கிய கையேடு.

தரம் 13 (5ம் வினா)

இதுதான் ஐ.எல்.ஏ. சலாம் இனால் தயாரிக்கப்பட்டு புரனைநடiநெ க்கு வழங்கப்பட்ட குறித்த வினா அடங்கிய வினாப்பத்திரம். இதுதான் ஐ.எல்.ஏ. சலாம் இனால் தயாரிக்கப்பட்டு டியூட்டரியில் செய்துகாட்டப்பட்டு பயிற்றுவிக்கப்பட்ட குறித்த வினா அடங்கிய கையேடு. புரனைநடiநெ = Guideline

தொடர்புடைய செய்திகள்




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -