"தோழர் பசீரின் மறைக்கப்பட்ட மர்மங்கள்" 01

முகம்மத் இக்பால், சாய்ந்தமருது 
1 வது தொடர்...
தாருஸ்ஸலாம் மீட்பு முன்னணி என்ற உரிமை கோரலுடன் “தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள்” என்னும் தலைப்பில் புத்தக வடிவில் அனாமதய துண்டுப்பிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இது மு.கா. தவிசாளரின் கைவரிசை என்றே நம்பப்படுகின்றது.

இந்த புத்தகத்தில் உரிமையாளரின் பெயர் குரிப்பிட படாததனால் இதனை ஒரு ஆவணமாக ஏற்றுக்கொள்ள முடியாது. அதாவது இதில் உள்ளவைகள் எதுவும் உண்மைக்கு புறம்பான அனாமதய துண்டுப் பிரசுரமாகவே கருதமுடியும். அப்படித்தான் இதில் குறிப்பிட பட்டவைகள் உண்மையாக இருந்தால், யாருக்கும் பயப்படாமல் நூலாசிரியர் தனது பெயரை குறிப்பிட்டு இருப்பார். 

இந்நாட்டு முஸ்லிம் மக்களுக்கு இருக்கின்ற அரசியல் பிரச்சனைகளை இவ்வாறு புத்தக வடிவில் பதிவிட்டு விழிப்புணர்வுகளுக்காக வெளியிட்டிருந்தால் இதனை பாராட்டி இருக்கலாம். ஆனால் தனக்கு பதவி கிடைக்காததன் காரணமாக, விரக்தியின் விளிம்பில் இருந்துகொண்டு இவ்வாறு புத்தகம் வெளியிடுவதனை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 

இத்துண்டு பிரசுரமானது முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களை குழப்ப முயட்சிக்கப்பட்டதுடன், கட்சியையும், இந்த தலைமையையும் இல்லாதொழிக்க இருபத்திநான்கு மணிநேரமும் சிந்தித்துக் கொண்டிருக்கும் சமூக துரோகிகளுக்கு தீணி போடும் வகையில் அமைந்துள்ளது. 

மக்கள் செல்வாக்கில்லாத தோழருக்கு கடந்த காலங்களில் மூன்று முறைகள் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் பதவியும், பிரதி அமைச்சர் பதவிகளும் வழங்கப்பட்டது. இதனால் பலவித நெருக்கடிகளையும், விமர்சனங்களையும் கட்சிக்குள்ளும், வெளியிலும் தலைவர் ஹக்கீம் எதிர்கொண்டிருந்தார். கட்சிக்கும், தலைமைக்கும் விமர்சனங்களை தேடித்தரும் இவ்வாறான விசப்பரீட்சையில் தொடர்ந்து இறங்க முடியாது.

அன்று ஈரோஸ் இயக்க தமிழ் உறுப்பினர்கள் அனைவரும் தமது தலைமைத்துவ கட்டளையை ஏற்று பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினமா செய்தபோது, ஒரே ஒரு முஸ்லிம் உறுப்பினரான பசீர் சேகுதாவூத் மட்டும் தலைமைத்துவ கட்டுப்பாட்டினை மீறி தனது பதவியினை தக்கவைத்துக் கொள்வதற்காக, ராஜினாமா செய்யாமல் பாதுகாப்பு தேடி 1993 ஆம் ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஸ்ரபிடம் தஞ்சமடைந்தார்.

தனக்கு அரசியல் அடையாளம் தந்த தலைமைக்கு கட்டுப்பட மறுத்த இவர், தனக்கு கட்டுப்படுவாரா என்ற சிந்தனை தலைவர் அஷ்ரப் அவர்களிடம் இருந்ததோ என்னவோ தெரியவில்லை. பசீர் சேகுதாவூத் அவர்களுக்கு கட்சியில் அவ்வளவு முக்கியத்துவம் மறைந்த தலைவரினால் வழங்கப்பட்டிருக்கவில்லை. ஆனால் தலைவரின் மறைவுக்கு பின்பு பேரியல் அஸ்ரப்புடன் ஏற்பட்ட தலைமைத்துவ பிரச்சினையை தனக்கு சாதகமாக பாவித்து, இன்றைய தலைவருடன் நெருக்கமாகி அதிகாரத்தினை அடைந்து கொண்டார். 

தனது பாராளுமன்ற உறுப்பினருக்குரிய ஓய்வூதியத்தினை பெற்றுக் கொள்வதற்காக, அதற்குரிய சேவைக்காலத்தினை பூர்த்தி செய்யும் பொருட்டே குறுகிய காலங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை தலைவரிடம் கோரியிருந்தார். அதற்கமையவே இவருக்கு முதலாவது தடவையாக தேசியப்பட்டியல் மூலம் பதவி வழங்கப்பட்டது. அதன்பின்பு கட்சியை வளர்ப்பதனை விட தன்னை வளர்ப்பதிலேயே பசீர் அவர்கள் வெற்றி கண்டார்.

உழைப்பவன் ஒதுக்கப்பட ஏமாற்றுபவன் அதிகாரத்தினை அனுபவிப்பது போன்று, வழக்கம்போல இம்முறையும் தேசியப்பட்டியலை எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்ததனால் ஏற்ப்பட்ட ஆத்திரத்தினதும், கோழைத்தனத்தினதும் மறுவடிவமே இந்த துண்டுப்பிரசுரம் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இல்லை. 

திரைமறைவு அரசியல் காய்நகர்த்தல்கள் மூலம் எப்படியும் ரவுப் ஹக்கீமை பணிய வைக்கலாம் என்ற நம்பிக்கையில், தனக்கு நான்காவது முறையும் தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் பதவி கிடைக்கும் என்று இறுதிவரைக்கும் நம்பியிருந்தார். ஆனால் இவரது எந்தவொரு சலசலப்புக்கும் தலைவர் ரவுப் ஹக்கீம் வசைந்து கொடுக்காததனால் தேசியப்பட்டியல் கனவு காணல் நீராகிவிட்டது. 

அடுத்த பதிவில் மறைக்கப்பட்ட மர்மங்களின் தொடரினை எதிர்பாருங்கள்.......
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -