ஆய்வரங்குகள் மூலமாக இப்பிராந்தியத்திற்கும் பல்கலைக்கழகத்திற்கும் நாட்டுக்கும் பல அனுகூலங்கள் கிடைக்கும்!



சலீம் றமீஸ், எம்.வை.அமீர்-
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடாத்தப்படுகின்ற சர்வதேச மற்றும் உள்ளக ஆய்வரங்குகள்,  பிராந்தியத்திற்கும் இப்பல்கலைக்கழகத்திற்கும் நாட்டுக்கும் பல நன்மைகளைக் கொண்டுவரும் என நம்புகின்றோம். இவ்வாறு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் அபூபக்கர் றமீஸ் தெரிவித்தார்.

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக அனர்த்த தவிர்ப்பு தொழில்நுட்பவியல் ஆய்வு மையம் மற்றும் அம்பாரை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையமும் இணைந்து ஏற்பாடு செய்த 'அனர்த்த ஆபத்து முகாமைத்துவம்' தொடர்பான மாநாடு (16) பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இது தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர் அங்கு கூறுகையில், இலங்கையில் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் அனர்த்தம் தொடர்பான ஆய்வரங்கு முதல் முறையாக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெறுவது மகிழ்ச்சியான விடயமாகும். இப்பல்கலைக்கழகம் தென்பிராந்தியத்தில் அமைந்துள்ளதால் அனர்த்தங்கள் நடைபெறுகின்ற போது பாதிக்கக் கூடிய அனர்த்ததின் மத்தியில் உள்ள ஒரு பல்கலைக்கழகமாக இருக்கின்றது. இதனால் அனர்த்த முகாமைத்துவம், அபாய முகாமைத்துவம் பற்றிய ஆய்வுகள், ஆய்வுப் பட்டறைகள் நடாத்த வேண்டிய தேவை உள்ளது. பல்கலைக்கழகத்திற்கும் சமூகங்களுக்கும் இடையிலான தொடர்பை ஏற்படுத்துகின்ற வேலைத் திட்டங்களை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் மேற்கொள்கின்றன என பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் அபூபக்கர் றமீஸ் மேலும் தெரிவித்தார்.

இந்த ஆய்வு மாநாட்டை ஏற்பாடு செய்ததன் ஊடாக நாட்டின் பல பாகங்களிலிருந்தும் ஆய்வாளர்களும் இந்த அனர்த்ததுடன் சம்மந்தப்பட்ட அதிகமான ஆய்வாளர்கள் தங்களது ஆய்வு வெளியீடுகளை சமர்பித்துள்ளனர்.

இந்த நிகழ்வின் போது, தொழில்நுட்பவியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி யூ.எல்.அப்துல் மஜீட், இந்த மாநாட்டின் இணைப்பாளரும் முன்னாள் பீடாதிபதியுமான கலாநிதி எம்.ஜீ.முகம்மட் தாரீக், முன்னாள் கலை, கலாசார பீடாதிபதியும் இம்மாநாட்டின் குழு உறுப்பினருமான எம்.எல்.பௌசூல் அமீர், அம்பாரை பாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஏ.சி.எம்.றியாஸ், இம்மாநாட்டின் குழுச் செயலாளர் கலாநிதி அஸ்லம் சஜா ஆகியோர்கள் கலந்த கொண்டனர்.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :