இலங்கையில் அவசரகால பிரகடனம் நாம் தெரிந்திருக்க வேண்டியவை..

J.f.காமிலா பேகம்-

ரு நெருக்கடி நிலை ஏற்பட்டால் ஜனாதிபதி அவசரகாலச் சட்ட விதிகளின்படி , ஒரு அரசாங்க வர்த்தமானி அறிவித்தல் மூலம் நாடு முழுவதிலுமோ அல்லது குறிப்பிட்ட பிரதேசத்திலோ அவசரகாலச் சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பார். அப்படியான அறிவித்தல் 30 நாட்களுக்குச் செல்லுபடியாகும். அதனை பாராளுமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றவும் வேண்டும். கால நீடிப்பு பாராளுமன்றத்தால் தேவை ஏற்பட்டால், தீர்மானம் மூலம் அமுல்படுத்தப்படும்.

இந்தக் காலத்தில் பத்திரிகைகள் பிரசுரங்கள் அரச அதிகாரியின் (சென்சாருக்கு) தணிக்கைகக்கு உட்பட வேண்டும். இதன்படி மக்கள் கூடுவது தடை. காவல்துறைக்கு சந்தேகத்தின் கைது செய்து தடுத்து வைக்கும் அதிகாரம் போன்றவை அமுலாக்கம் ஆகும்.

இந்த அவசரகால சட்டம் குறித்து நாட்டிலுள்ள அனைத்துக் குடிமக்களும் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டியது விடயங்கள் வருமாறு,

*நாட்டின் பாதுகாப்புக் கடமையிலுள்ள பொலிஸார், விசேட அதிரடிப்படை மற்றும் முப்படை ஆகிய தரப்பின் எந்தவொரு உறுப்பினராலும், எந்த நேரத்திலும் யாரையும் கைது செய்வதற்கான அதிகாரம் உண்டு.

கைதுக்கு முன்பதாக பின்னதான விசாரணை என்ற கதைக்கே இடமிருக்காது.எந்த வழியிலும் கைது செய்வதற்கான அதிகாரம் உண்டு.

இதன்போது யாராவது தப்பிப்பதற்கு முயன்றால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்வதற்கான முழு அதிகாரமும் உண்டு.

ஒருவரை சந்தேக நபராக கருதுவதற்கான முடிவெடுக்கும் அதிகாரம், கடமையிலுள்ள எந்தவொரு ஆயுதம் தரித்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கும் அதிகாரம் உண்டு.

கைது செய்யப்பட்டவர்களுக்கான விசாரணைகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கட்டாயம் இலங்கையைப் பொறுத்தவரை இல்லை என்பது முக்கியமான விடயம்.

தேவை ஏற்படின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் கீழ் வைத்து விசாரிப்பதற்கான அதிகாரம் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர்க்கு உண்டு.

இலங்கையில் நீண்டகாலம் விசாரணைகள் இல்லாமல் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் என்ற வகைக்குள் அடங்குவோர் இந்த அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச நாடுகளின் கடும் அழுத்தம் காரணமாக இந்த சட்டம் இலங்கையில் நீக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் இன்று அதிகாலை (02) அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :