ஜனவரி.15ல் விமான சேவை துவக்கம்...

(முஹம்மட் ஆரிப்மரிக்கார்)

புதுவை விமான நிலையத்திலிருந்து சில வருடங்களுக்குமுன் சென்னை, பெங்களூர், திருப்பதிக்கு 18 இருக்கைகள் கொண்ட சிறிய ரக விமானங்கள் இயக்கப்பட்டன.போதிய வருமானம் இல்லாததாலும், விமான நிலையத்தில் வசதிகள் இல்லாததாலும் இச்சேவை ஓரிரு மாதங்களில் நிறுத்தப்பட்டது. இருப்பினும் வெளிநாடு சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, தொழிலதிபர்களும் விமான சேவை வேண்டுமென வலியுறுத்தினர்...

இதனால் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்து,பெரிய ரக விமானத்தை இயக்க அரசு முடிவெடுத்தது.அதன்பிறகு விமான நிலைய புனரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று முடிவடைந்தன...

இதையடுத்து சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜவேலு,சில வாரங்களுக்குமுன் சென்னை சென்று முன்னணி விமான நிறுவனங்களுடன் புதுவை விமான சேவை தொடக்கம் குறித்து கலந்தாய்வு நடத்தினார்.அப்போது சில நிறுவனங்கள் புதுவையிலிருந்து விமானங்களை இயக்க முன்வந்தன.இந்நிலையில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் பம்மார் டியர்டேஷ் கியூ400 விமான போக்குவரத்து ஆரம்பிக்க இசைவு தெரிவித்துள்ளது. இதற்கான ஒப்புதல் கடிதத்தையும் அனுப்பியுள்ளது..

இந்த கடிதத்தை அமைச்சர் ராஜவேலு, முதல்வர் ரங்கசாமியிடம் நேற்று ஒப்படைத்தார். அப்போது விமான நிலைய அதிகாரி குணசேகரன் உடனிருந்தார்...
புதுவையிலிருந்து விமான சேவை ஜனவரி 15ம்தேதி முதல் தொடங்குகிறது. முதல்கட்டமாக புதுவையிலிருந்து பெங்களூருக்கு விமானம் இயக்கப்படுகிறது...

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :