உலகில் உள்ள முஸ்லிம்கள் தொகை 160 கோடி – உலக மக்கள் தொகையில் 23 சதவீதம்

அமெரிக்காவில் உள்ள பேவ் (பி.இ.டபிள்யூ) பேரவை அமைப்பு உலக அளவில் மதரீதியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தியது. அவர்களில் கிறிஸ்தவர்கள் முதலிடத்தில் உள்ளனர். அவர்கள் 220 கோடி பேர் உள்ளனர். இது மக்கள் தொகையில் 32 சதவீதமாகும்.

இவர்களை தொடர்ந்து 2-வது இடத்தில் முஸ்லிம்கள் உள்ளனர். இவர்களின் மக்கள் தொகை 160 கோடி. 1.6 பில்லியன் மக்கள் இஸ்லாம் மதத்தை பின்பற்றுகின்றனர். இது உலக மக்கள் தொகையில் 23 சதவீதமாகும்.

3-வது இடத்தில் இந்துக்கள் உள்ளனர். இவர்களின் மக்கள் தொகை 100 கோடி. இது உலக மக்கள் தொகையில் 15 சதவீதமாகும்.

இவர்களையடுத்து 50 கோடி புத்த மதத்தினரும், 1 கோடியே 40 லட்சம் யூதர்களும் உள்ளனர். இந்த கணக்கெடுப்பு மற்றும் ஆய்வு 230 நாடுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடத்தப்பட்டது. அவர்களில் 10-க்கு 8 பேர் மத அடிப்படையில் வாழ்கின்றனர். மொத்தம் 580 கோடி பேர் பல்வேறு மதங்களை கடைபிடித்து வருகின்றனர் என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :