கிறடிட் காட் நிறுவனத்தில் 305 இலட்சம் ரூபாவினை வைப்பிலிட்ட வைப்பாளர் ஒருவர் - மரத்தில் ஏறி போராட்டம்

கோல்டன் கீ கிறடிட் காட் நிறுவனத்தில் 305 இலட்சம் ரூபாவினை வைப்பிலிட்ட வைப்பாளர் ஒருவர், கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள பிரேமதாச உருவச்சிலைக்கு அருகிலுள்ள மரமொன்றின் மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். 

றம்புக்கனை பிரதேசத்தைச் சேர்ந்த சாந்த என்ற நபரே இவ்வாறு மரத்தில் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என்று அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். 

சுமார் 40 அடி உயரமான மரத்தின் உச்சியில் அமர்ந்துள்ள மேற்படி நபர், கோல்டன் கீ விவகாரப் பிரச்சினை தீரும் வரை தான் மரத்திலிருந்து கீழே இறங்கப்போவதில்லை என பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார். 

கோல்டன் கீ விவகாரம் தொடர்பில் சில மாதங்களுக்கு கேகாலை பிரதேசத்தில் வைத்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்ட சாந்த என்ற நபரே இன்றைய தினமும் மரத்தில் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவராவார். 

கோல்டன் கீ நிறுவனத்தில் வைப்பிலிட்டு பிரச்சினைகளை எதிர்நோக்கி வரும் அனைத்து வைப்பாளர்கள் சார்ப்பாகவுமே தான் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாகவும் அவர் கூறியுள்ளார். 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :