மழை வெள்ளத்தால் மட்டக்களப்பில் இருவர் பலி,34,753பேர் பாதிப்பு; 691 குடும்பங்கள் முகாம்களில்

















மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக இதுவரையில் 34,753பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் 691 குடும்பங்கள் அகதி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இம்மாவட்டத்தில் 115 வீடுகள் முழுமையாகவும் 607 வீடுகள் பகுதி அளவிலும் தேமடைந்துள்ளன. அத்துடன் இருவர் பலியாகியுளளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் அந்நிலையம் குறிப்பிட்டது.

கிரான், செங்கலடி, மண்முனை வடக்கு, வெல்லாவெளி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் நலன்புரி நிலையங்கள் இயங்கி வருவதாகவும் அந்நிலையம் தெரிவித்தது.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் தேங்கியுள்ள வெள்ள நீரை வடிந்தோடச் செய்ய பெரிய கல்லாறு முகத்துவாரம் வெட்டிவிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் உத்தரவின் பேரில் மட்டக்களப்பு முகத்துவாரம், கல்லாறு முகத்துவாரம் வெட்டிவிடப்பட்டுள்ள நிலையில் வெள்ள நீர் தற்போது படிப்படியாக வடிந்து வருகின்றது.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது ஏறு;பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தையடுத்து கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருமலை வளாகம் தவீர்ந்த ஏனைய மட்டக்களப்பு மற்றும் வந்தாறுமுலை வளாகங்களின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி 2ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளதாக பல்கலைக் கழக உபவேந்தர் கிட்ணர் கோவிந்தராஜா தெரிவித்தார்.

பல்கலைக்கழக வளாகத்தில் வெள்ளநீர் தேங்கியுள்ளதையடுத்து மாணவர்களது நலன் கருதி கல்வி நடவடிக்கைகளை ஒத்தி வைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பு நகரிலுள்ள மருத்துவ பீடம் சுவாமி விபுலானந்தர் இசை நடனக் கல்லூரி மற்றும் வந்தாறுமுலை வளாகத்தில் கலை கலாச்சாரம் விஞ்ஞானம் வணிகம் உள்ளிட்ட அனைத்து பீடங்களுக்குமான கல்வி நடவடிக்கைகளும் பிற்போடப்பட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :