எரிபொருளாக ஐஸ்கிறீம் பயன்படுத்தலாம் - யோசிக்காமல் உள்ளே வந்து பாருங்கள்

ஐஸ்கிரீமில் இருக்கும் ஹைட்ரோகார்பன்களை எரிபொருளாக பயன்படுத்தி கார்களை இயக்க முடியும் என இங்கிலாந்து ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். வாகனங்களில் பயன்படுத்தப்படும் பெட்ரோல், டீசல் போன்ற மரபு எரிபொருள்களால் சுற்றுச் சூழலுக்கு தீங்கு ஏற்பட்டு வருகிறது.
எனவே, மாற்று எரிபொருள் தொழில்நுட்பத்தை கண்டறிவதில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்ட்டர் பல்கலைகழகத்தை சேர்ந்த நிக் டர்னர் தலைமையிலான ஆய்வாளர்கள் அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருட்களில் இருக்கும் ஹைட்ரோகார்பன்கள் மூலம் கார்களை இயக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர்.
ஐஸ்கிரீம், குளியல் சோப் மற்றும் ஷாம்பூ என அனைத்திலும் இருக்கும் ஹைட்ரோகார்பன்களை கார்களுக்கான எரிபொருளாக பயன்படுத்த முடியும் என அவர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும், இது குறித்த ஆராய்ச்சியை தீவிரப்படுத்தியிருக்கும் இந்த ஆய்வுக் குழுவினர் விரைவில் முழுமையான ஆய்வறிக்கையை வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர்

(புதிய உலகம்)
அப்படி என்றால்  இத்தனையும் பாவிக்கும் மனிதன் நிலை......!!!!

பேஸ்புக் இல ஒரு  லைக் பன்னிவிடுங்கள் நன்றி...

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :