பிரான்சில் நோயால் அவதிப்படுபவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் வகையில் புதிய சட்டமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. நீண்ட நாள் நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்படுபவர்கள், இனிமேல் உயிர்வாழ்வதற்கு இனிமேல் முடியாது என்ற நிலையில் உள்ளவர்கள் ஆகியோர் அவர்களின் ஒப்புதல் மற்றும் வாரிசுகளின் ஒப்புதல் படி தற்கொலை செய்து கொள்ளும் வகையில் புதிய சட்டமொன்று அறிமுகப் படுத்தப்படவுள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்கொலை சட்டத்திற்கு 89 சதவிகித மக்களும் ஆதரவு அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜூன் மாதத்துக்குள் இதற்கான சட்ட வரைவு தயாரித்து முடிக்கப்படவுள்ளதோடு மூன்று விதமான சூழ்நிலைகளில் இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி , நோயாளிகளே தற்கொலை உதவி கோருதல்,நோயாளி சுயநினைவை இழந்துள்ள நிலையில், குடும்பத்தினரின் அனுமதியோடு தற்கொலைக்கு அனுமதித்தல் மற்றும் வெறும் உடலாக மட்டும் நோயாளி இருக்கும் நிலையில், உணர்வோ- அறிவோ இல்லாமல் இதயம் மட்டும் துடித்து கொண்டிருக்கும் போது தற்கொலையை அனுமதித்தல் ஆகியவற்றின் அடிப்படையிலேயே புதிய சட்டம் அறிமுகமாகவுள்ளதாக தெரிகிறது.
0 comments :
Post a Comment