சிங்கள மக்களிலுள்ள ஒரு சிலரின் வேலைக்கு முஸ்லிம்கள் அலட்டிக்க வேண்டாம் - கோத்தபாய


முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை மேற்கொண்டு வருவது சிங்கள மக்களிலுள்ள ஒரு சிறு எண்ணிக்கையானோரேயாவர். இவர்கள் தொடர்பில் முஸ்லிம்கள் அலட்டிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. பெரும்பான்மை சிங்கள மக்கள் ஒருபோதும் இவ்வாறான செயற்பாடுகளை விரும்புவதில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மற்றும் கண்டி,பதுளை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 30 முஸ்லிம் பிரதிநிதிகள் நேற்று நண்பகல் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை அவரது அலுவலகத்தில் சந்தித்து உரையாடியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டதாக உலமா சபையின் பிரதிப் பொதுச் செயலாளர் மௌலவி எம்.எஸ்.எம்.தாஸிம்  தெரிவித்தார்.

இச் சந்திப்பு தொடர்பில் மௌலவி தாஸிம் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்

முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பிரசாரங்கள், சனத்தொகை அதிகரிப்பு தொடர்பான குற்றச்சாட்டுக்கள், கண்டி மற்றும் பதுளை உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நாம் பாதுகாப்புச் செயலாளருக்கு எடுத்து விளக்கினோம். குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக இணையதளங்கள் வாயிலாக மேற்கொள்ளப்படும் பிரசாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அவசியம் எனவும் அவரிடம் சுட்டிக்காட்டினோம்

இதற்குப் பதிலளித்த அவர், தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு மூலமாக இதுதொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார் எனவும் மௌலவி தாஸிம் மேலும் குறிப்பிட்டார்.

இச் சந்திப்பில் கலந்து கொண்ட அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் தலைவர் ஆகியோர் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் விளக்கமளித்துள்ளனர்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :