கிழக்கு மாகாண இளைஞர்களுக்கு கொரிய நாட்டு மீனவத் துறையில் வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலைய தலைவர் அமால் சேனாதிலங்கார தெரிவித்துள்ளார்.
தேசிய பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் இளைஞர்களை வளப்படுத்தும் நோக்கில் இந்த வேலைவாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதாகவும் இதன்பொருட்டு இளைஞர்கள் மாவட்ட ரீதியாக இனங்காணப்பட்டு பயிற்சியளிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்திலிருந்து சென்று வெளிநாடுகளில் பணிபுரியும் இளைஞர்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு கணிசமான பங்களிப்புச் செய்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை இளைஞர்களுக்கு வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் பல நாடுகளுடன் புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் சேனாதிலங்கார மேலும் குறிப்பிட்டுள்ளார்.
(விடிவெள்ளி)
0 comments :
Post a Comment