அட்டாளைச்சேனை பொது மைதானம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது..!!





(எம்.பைஷல் இஸ்மாயில், எஸ்.எம்.அறூஸ்)

அம்பாறை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பெய்து வரும் அடைமழை காரணமாக அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள பல வீதிகள், பாடசாலைகள், குடியிருப்பு நிலங்கள், விளையாட்டு மைதானம் என்பன நீரில் மூழ்கியுள்ளன.

அட்டாளைச்சேனை, பாலமுனை, திராய்க்கேணி, ஒலுவில் ஆகிய பிரதேசங்களில் உள்ள இடங்களே இவ்வாறு வெள்ள நீரினால் மூள்கியுள்ளது.

இவ்வாறு வெள்ள நீரினால் மூள்கியுள்ள குடியிருப்பு நிலங்களிலுள்ள வெள்ள நீர் வடிந்தோடுவதற்கென அமைக்கப்பட்ட வடிகான்களில் மண், கல், மரக்கட்டைகள் மற்றும் குப்பை கூழங்கள் போன்றவைகளினால் மூடப்பட்டுள்ளதால் வெள்ள நீர் வடிந்தோட முடியாமல் குறிப்பிடப்பட்ட இடங்கள் நீரில் மூழ்கியுள்ளது.

இதேவேளை அட்டாளைச்சேனை நெல்சிப் திட்டத்தினால் பல கோடிக்கணக்கான ரூபாய்களை செலவு செய்து முன்னெடுக்கப்பட்ட வீதி அபிவிருத்தி வேலை திட்டத்தின்படி கடந்த பல மாதங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்ட பல வடிகான்களுக்கு மூடிகளையும் போடுபடாமல் ஒப்பந்தக் காரர்கள் மிக அசமந்தப் போக்கில் உள்ளனர். இதனால் குறிப்பிட்ட பிரதேச வாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :