பிரபல கர்நாடக இசை பாடகி நித்ய ஸ்ரீயின் கணவர் தற்கொலை செய்துகொண்டதனையடுத்து நித்ய ஸ்ரீயும் விசம் அருந்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
பாடகி நித்ய ஸ்ரீயின் கணவர் மகாதேவன் இன்று சென்னை கோட்டூர்புரம் அருகே உள்ள அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த இடத்திற்கு காரில் சென்று ஆற்றில் குதித்ததை கண்டு பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து தீயணைப்பு படையினரால் சடலமாக மீட்கப்பட்டு தற்போது பிரதேன பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
இதேவேளை இத்தகவலை அறிந்த நித்ய ஸ்ரீ விரக்தியில் விசம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். ஆனால் தற்போது மருத்துவமனையில் அனுமதித்து அவருக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இத்தற்கொலைக்கு குடும்பப் பிரச்சினையே காரணம் என கூறப்படுகிறது.
0 comments :
Post a Comment