தென்னாபிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

நியூஸிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

தென்னாபிரிக்காவின் கேப்டவுன் நகரில் புதன்கிழமை தொடங்கிய இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது.

தென்னாபிரிக்க வீரர்களின் நேர்த்தியான பந்து வீச்சினால் நிலை குலைந்த நியூஸிலாந்து வீரர்கள் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 45 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டனர்.

அணியில் அதிகபட்சமாக வில்லியம்ஸன் மட்டும் 11 ஓட்டங்களை எடுத்தார். தென்னாபிரிக்கத் தரப்பில் பிலாண்டர், 7 ஓட்டங்களை கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென்னாப்பிரிக்கா சிறப்பாக விளையாடி ஓட்டங்களைக் குவித்தது.

அணியின் ஸ்கோர் 8 விக்கெட் இழப்புக்கு 347 ஆக உயர்ந்தபோது டிக்ளேர் செய்தது.

302 ஓட்டங்களால் பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது நியூஸிலாந்து. ஓட்டங்கள் ஏதுமின்றி முதல் விக்கெட்டை இழந்தாலும் பின்வரிசை வீரர்கள் பொறுப்புடன் விளையாடினர்.

எதிரணியின் பந்து வீச்சு ஆக்ரோஷமாக இருந்தபோதும், அருமையாக விளையாடிய பிரொன்லீ 160 பந்துகளில் சதமடித்தார். 2 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் அவர் இந்த ஓட்டங்களை எடுத்தார்.

தொடர்ந்து விளையாடிய அவர் 106 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். தலைவர் மெக்கல்லம் 51 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க நியூஸிலாந்து அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் 102.1 ஓவரில் 275 ஓட்டங்களுக்கு முடிவுக்கு வந்தது.

இதனால் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து தோல்வியைத் தழுவியது.

தென்னாபிரிக்கத் தரப்பில் ஸ்டெயின் 3 விக்கெட்டுகளையும், பிலாண்டர் மற்றும் காலிஸ் தலா 2 விக்கெட்டுகளையும், மோர்கல் மற்றும் பீட்டர்சன் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து மொத்தம் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்ட பிலாண்டர் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

5 நாள் கொண்ட இப்போட்டி 3 நாள்களுக்குள் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியின் மூலம் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா முன்னிலை பெற்றது

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :