அட்டாளைச்சேனை பிரதேச பொது நூலகங்களில் கடமையாற்றும் நூலக உதவியாளர்கள் வேலையில் அசமந்தம்.


(எம்.எம்.முபாரக்)
அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குற்பட்ட பொது நூலகங்களில் கடமையாற்றும் நூலக உதவியாளர்கள் கடமை நேரத்தில் நூலகத்தில் இருப்பதில்லை என புகார் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் வாசகர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

இப் பொது நூலகங்களில் வேலை செய்யும் நூலக உதவியாளர்கள் காலையில் கடமைக்கு வந்து அன்றைய பத்திரிகைகளை கட்டிவிட்டு சென்றால் பிறகு நூலகம் மூடுவதற்கே வருகின்றார்கள். இந்த இடைப்பட்ட நேரகாலத்திற்குள் நூலகத்திற்கு வருகின்ற வாசகர்கள் தமக்குத் தேவையான பத்திரிகைகளையோ? அல்லது புத்தகங்களையோ? கேட்டுப் பெறமுடியாமல் சிக்கலை எதிர்கொள்கின்றனர்.

அதுமட்டுமல்ல, நூலகத்தில் இருக்கின்ற பத்திரிகைகள், சஞ்சிகைகள், புத்தகங்கள் என்பன களவாடப்பட்டும், கிழிக்கப்பட்டும் வருகின்றன. இதனை பார்ப்பதற்கோ? அல்லது களவுகளை பிடிப்பதற்கோ? நூலகத்தில் எவருமே இல்லை.

நூலகம் என்பது ஒரு மனிதனின் அறிவை விருத்தியாக்குகின்ற ஒரு புனிதமான இடமாகும். தொழில் ஒன்று வேண்டும் என்பதற்காக சம்பளம் பெறும் இவ்வாறான உத்தியோகத்தர்கள்  மறுமையில் இறைவனிடம் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

அட்டாளைச்சேனை பொது நூலகத்தில் கடமை புரிகின்றவர்கள் நூலகம் என்றால் என்ன? என்று தெரியாதவர்களே கூடுதலாக இருப்பதாக கூறப்படுகின்றது. ஏன்? இவ்வாறானவர்களை நூலகத்தில் கடமை புரிய அதிகாரிகள் பணித்திருக்கின்றார்கள் என்ற மர்மம் இதுவரை துலங்கவில்லை.
அட்டாளைச்சேனை பிரதேசம் என்பது இலங்கையின் கல்வித் துறையில் மிகப் பிரசித்தமான இடமாகும். இங்கு நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மாணவர்கள், ஆசிரியர்கள், மார்க்க உலமாக்கல் என்று பலரும் கல்வி பயில வருகின்றார்கள். இவர்கள் பொது நூலகத்திற்கு மாலை நேரங்களில் வருகை தருகின்றபோது நூலகத்தின் செயற்பாடுகள் மிகக் கவலையளிப்பதாகக் கூறப்படுகின்றது.
ஏதாவது, ஒரு விடயத்தை நூலக உதவியாளருடன் பேச முற்பட்டால் வாசகர்களுடன் எரிந்து விழுவதாகவும் சொல்லப்படுகின்றது.

நூலகத்தில் ஒழுங்கு படுத்தப்பட்ட எந்தவொரு செயற்பாடுகளும் காணப்படவில்லை. நூலகர் உட்பட இங்கு கடமை புரிகின்றவர்கள் ஒட்டுமொத்தமாக வேண்டா வெறுப்பாகவே கடமைக்கு வருகின்றார்களாம்.
நூலகத்தில் கடமை புரிவதற்காக சம்பளம் வாங்கும் உத்தியோகத்தர்கள் கடமை நேரத்தில் தமது தனிப்பட்ட வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் சொல்லப்படுகின்றது.

ஏன்? இவ்வாறான செயற்பாடுகளை அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ. அன்ஸில், பிரதேச சபை செயலாளர் எம்.சித்திக், பிரதேச சபை உறுப்பினர்களான அப்துல் முனாப், எஸ்.எல்.முனாஸ் ஆகியோர் பார்த்துக் கொண்டா? இருக்கின்றனர் என்ற கேள்வி பலமாக எழுப்பப்படுகின்றது.

மக்களின் தந்த அமானிதத்தை காப்பாற்றுவோம் என்று வாக்குப் பெற்று பிரதேச சபை உறுப்பினர்களான நம்மவர்கள் என்னதான் செய்து கொண்டு இருக்கின்றனர்.  இனியாவது காத்திரமாக செயற்படுவார்களா?

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :