பிரதம நீதியரசர் பிரச்சினையும் பிளாஸ்டிக் கூடை பிரச்சினையும் ஒன்று என நுகர்வோர் மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ தெரிவித்துள்ளார்.
பிரதம நீதியரசர் சிறந்த முறையில் நடித்துக் கொண்டிருப்பதாக கொழும்பில் இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.
பிரதம நீதியரசர் பதவியில் இருந்து விலக ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
கௌரவமான முறையில் பிரதம நீதியரசர் பதவி விலகாவிட்டால் அவரை வீட்டுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதற்கான அதிகாரம் உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பிளாஸ்டிக் கூடை சட்டம் தற்போது வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டு வருவதாகவும் அந்த சட்டத்தை மீறுவோர் தண்டிக்கப்படுவர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment