பிலியந்தல மொரதன பிரதேசத்தில் வசிக்கும் இலங்கை கடற்படையில் பணிபுரியும் ஒருவரே இக்கொலையை புரிந்துள்ளார்.
நேற்று (03) இரவு இவரது வீட்டில் கணவன் - மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் கடும் ஆத்திரமடைந்த தந்தை தனது பெண் குழந்தையை அடித்து - உதைத்து கொலை செய்துள்ளார்.
தாக்குதலில் மூச்சுப்பேச்சை இழந்த குழந்தை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது உயிரிழந்து காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பிலியந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment