பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவிற்கு, பிரதம நீதியரசரை விசாரிப்பதற்கான சட்ட அதிகாரம் இல்லையென உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
குற்றப் பிரேரணையை விசாரணைக்கு உட்படுத்தியதன் பின்னர் பாராளுமன்ற விசேடத் தெரிவுக் குழு மேற்கொண்ட தீர்மானங்கள் சட்டரீதியானவை அல்ல எனவும் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் சட்டமல்ல என்பதுடன் பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு எந்தவிதமான சட்ட அதிகாரங்களும் இல்லை.
நிலையியற் கட்டளை 78(ஏ) உறுப்புரை ஒரு சட்டமல்ல. ஆதலால் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு ஒரு நீதிபதியை குற்றவாளி என தீர்மானிக்கும் சட்ட அதிகாரமோ அல்லது வலுவோ இல்லை என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அரசியலமைப்பு தொடர்பிலான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவித்தபோதே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்துக்கும் நீதித்துறைக்குமான முறுகல் நிலை அதிகரித்துள்ளமையை அடுத்து நிறைவேற்று அதிகாரம் தலையிட சூழ்நிலை ஏற்பட்டுள்ளமையால், இன்னும் உக்கிரமான நிலைமைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சட்டவியலாளர்கள் தெரிவிக்கி்ன்றனர்.
சிறிலங்காவின் ஜனாதிபதியாக இருக்கும் மஹிந்த ராஜபக்ஷவே நிறைவேற்று அதிகாரங்களை கொண்டவர் என்பது குறி்ப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment