அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீனவர்கள் தமது படகுகளை தரிப்பிடச் செய்வதில் பெரும் அசளகரியங்களை எதிர் கொள்வதாக சுட்டிக்காட்டி, துறை முக அதிகார சபையின் தலைவர் பிரியன்த விக்ரமவுக்கு ,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள கடற் கொந்தளிப்பு.மற்றும் இயற்கை மாற்றங்கள் காரணமாக கரையோர மீனவர்கள் தமது படகுகளை நங்கூரமிடுவதில் பிரச்சினைகளை எதிர் கொள்வதாலும்.அதிகரித்த கடல் அலை காரணமாக படகுகள் கடலுடன் அடித்து செல்லப்படுவதும் மற்றும் சேதங்களுக்கும் உட்படுவதால் மீனவர்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகுவதாகவும் அமைச்சர் றிசாத் பதீயுதீன்,துறை முக அதிகார சபை தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான சிரமமான நிலையில் அம்பாறை மாவட்ட மீனவர்களை பாதுகாக்கும் வகையில் ஒலுவில் துறைமுகத்திற்குள் படகுகளை தரிப்பிடம் செய்வதற்கு தேவையான பணிப்புரைகளை ஒலுவில் துறை முக அதிகாரிகளுக்கு வழங்குமாறு அமைச்சர் றிசாத் பதியுதீன் ,துறைமுக அதிகார சபையின் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
செய்தியைப்படித்ததும் Facebook Like கிளிக்பன்ன மறக்கவேண்டாம்.
0 comments :
Post a Comment