(சௌஜீர் ஏ முகைடீன்)
சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த பல்வகை தாவரங்களை விற்பனை செய்யும் நிலையத்தினை கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் உள்ளிட்ட குழுவினர் இன்று (03.01.2013) மாலை நேரில் சென்று பார்வையிட்டு அகற்றுவித்தனர்.
இவ்விற்பனை நிலையமானது கல்முனை தரவைக் கோவில் அருகாமையில் உள்ள வடிகானின் மேல் அமைக்கப்பட்டிருந்தது. இதனால் குறித்த வடிகானை துப்பரவு செய்ய முடியாத நிலை காணப்பட்டது. இது தொடர்பாக பொதுமக்கள் முதல்வரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்போது ஆணையாளர் ஜே.லியாகத்அலி, பொறியியலாளர் ஹலீம் ஜௌசி, தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் வருமான வரி பரிசோதகர்கள் ஆகியோர் பிரசன்னமாகி இருந்தனர்.
செய்தியைப்படித்ததும் Facebook Like கிளிக்பன்ன மறக்கவேண்டாம்.
0 comments :
Post a Comment