மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி கல்வி கோட்டத்தின் கீழ் இயங்கும் புதிய காத்தான்குடி றிஸ்வி நகர் அல் இக்பால் வித்தியாலய மாணவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை காலை புதிய பாடசாலை கட்டிடத்தை பெற்றுத்தாருங்கள் எனக்கோரி பாடசாலை பகிஷ்கரிப்பிலும் ஆர்பாட்டமொன்றிலும் ஈடுபட்டனர்.
சுனாமி அனர்த்தத்தினால் சேதமடைந்த இந்த பாடசாலை கட்டிடம் நோர்வே நாட்டு அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நோர்வையின் அகதிகள் பேரவையால் நிர்மானிக்கப்பட்டு இப்பாடசாலைக்கு 2007ஆம் ஆண்டு வழங்கப்பட்டு அக்கட்டிடத்தில் இப்பாடசாலை 2009-08-13 வரை இயங்கி வந்ததது.
இந் நிலையில் இந்த பாடசாலையின் புதிய கட்டிடம் தேசிய தொழிற்பயிற்சி அதிகார சபையின் தொழிற்பயிற்சி நடவடிக்கைகளுக்காக 2009ஆம் ஆண்டு தொழிற்பயிற்சி அதிகார சபைக்கு வழங்கப்பட்டதால் இந்த றிஷ்வி நகர் அல் இக்பால் வித்தியாலயம் அதன் பழைய கட்டிடத்தில் பல சிரமத்திற்கும் அசௌகரியங்களுக்கு மத்தியில் இயங்கி வந்த நிலையில் தமக்காக கட்டப்பட்ட அப்பாடசாலையின் புதிய கட்டிடத்தை தமக்கு வழங்க வேண்டும் எனக்கேட்டு இம்மாணவர்கள் ஆர்ப்பாட்டத்திலும் பாடசாலை பகிஷ்கரிப்பிலும் ஈடுபட்டனர்.
இன்று காலையில் பாடசாலைக்கு சமூகமளித்த மாணவர்கள் சுலோகங்களை தாங்கி ஆர்பபாட்டத்தில் ஈடுபட்டனர்.
வலயக் கல்விப்பணிப்பாளரே எங்களுக்கான புதிய கட்டிடத்தை மீட்டுத்தாருங்கள், எங்களை நுளம்பிலிருந்து காப்பாற்ற உதவுங்கள், ’2007இல் எங்களுக்காக கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை 2013 வரை எங்களுக்காக ஒப்படைக்கவில்லை’மழை காலங்களில் கல்வியை தொடர முடியாமல் தத்தளிக்கும எங்களுக்கு உதவுங்கள’கோட்டக் கல்விப் பணிப்பாளரே புதிய பாடசாலை கட்டிடத்தைப் பெற்றுத்தாருங்கள்’சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சரே சிறுவர்களாகிய எங்கள் கல்வியை தொடர உதவுங்கள்’ போன்ற பல்வேறு சுலோகங்களை ஏந்தி இம் மாணவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இம்மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தில் பாடசாலை மாணவர்களின் பெற்றார்களும் இணைந்திருந்தனர். இங்கு வருகை தந்த காத்தான்குடி பொலிசாரும் இராணுவத்தினரும் விசாரணைகளை மேற்கொண்டனர். ஸ்தலத்திற்க்கு விஜயம் செய்த மட்டக்களப்பு மத்தி வலயத்தின் புதிய வலயக் கல்விப் பணிப்பாளர் அஹமட் இன்று தொடக்கம் புதன்’வியாழன்’வெள்ளி மூன்று தினங்களுக்கு பாடசாலையை மூடுமாறும் எதிர்வரும் திங்கட்கிழமை புதிய கட்டிடத்தில் பாடசாலையை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக பாடசாலை மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொது மக்களிடம் உறுதியளித்தார்.

குறித்த இடத்திற்கு காத்தான்குடி கோட்டக்கல்வி அதிகாரி சுபைர் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட் ஆகியோரும் விஜயம் செய்திருந்தனர்.
0 comments :
Post a Comment