உறவினரான இளம் பெண் ஒருவரை இரகசியமான முறையில் வீடியோ படமெடுத்துவிட்டு அதனை வெளியிடப்போவதாக அச்சுறுத்தி 10 இலட்சம் ரூபா பணத்தை கப்பமாக கோரிய குடும்ஸ்தரொருவர் கைது செய்யப்பட்டு கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து குறித்த நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணத்தில் கணினி பயிற்சி நிலையமொன்றினை நடத்தி வரும் குடும்பஸ்தரொருவர் புத்தளத்திலுள்ள தனது உறவினர் வீடொன்றிற்கு அண்மையில் சென்றுள்ளார். அங்கு அந்த வீட்டு உரிமையாளரின் மகளது அறைக்குள் வீடியோ கமராவினை வைத்து இவர் படம் பிடித்துள்ளார்.
இதனை வெளியே காண்பிக்கப்போவதாக மிரட்டி குறித்த நபர் 10 இலட்சம் ரூபா கப்பத்தினை குறித்த யுவதியிடம் கேட்டுள்ளார். இதனையடுத்து பெரும் அச்சம் கொண்ட யுவதி இது தொடர்பில் குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் திட்டமிட்ட குற்றச்செயல்களை தடுப்பதற்கான பொலிஸ் பிரிவில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து சந்தேகநபரை கைது செய்ய பொலிஸார் அவர் மீது கப்பம் கோரிய குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தாக்கல் செய்தனர். நேற்றுமுன்தினம் குறித்த சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டதையடுத்து எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

0 comments :
Post a Comment