பதுளை, பிபிலையிலுள்ள காத்தான்குடியைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான பென்ஸி கடை (ஆடம்பர பெருட்கள் விற்கும் நிலையம்) ஒன்று நேற்றிரவு தீப்பற்றுக்குள்ளாகியுள்ளது. குறித்த தீ விபத்துச் சம்பவம் காரணமாக அந்நிலையத்தின் கலஞ்சிய அரை பெரிதும் சேதத்துக்குள்ளாகியுள்ளது.
பிபிலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் அமைந்துள்ள குறித்த விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக கலஞ்சிய அரையில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்கள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்றிரவு இச்சம்பவம் நடைபெற்றிருந்த போதும் இன்று காலையிலேயே இது தொடர்பில் தெரியவந்துள்ளது.
குறித்த தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் இது ஒரு சதியாக இருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில் மேலதிக விசாரணைகளை பிபிலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
.
0 comments :
Post a Comment