சுமார் இரண்டு வருடகாலம் சவூதி அரேபியாவில் பணிபுரிந்த இலங்கை பணிப்பெண் அங்கு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பெந்தர - கம்புறுகல பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண்ணொருவரே இவ்வாறு நாடுதிரும்பியுள்ளார்.
குறித்த பெண் தலையில் தாக்கப்பட்டுள்ளதோடு, இரண்டு கைகளும் எரிகாயங்களுக்கு உள்ளாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சித்திரவதைகளை அனுபவித்த நிலையில் நாடு திரும்பியுள்ள குறித்த பெண் தற்போது காலி - பலபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
.
0 comments :
Post a Comment