காமவலி தீர்க்கக் கருவி....




தூண்டப்படாத காமம்
துயில் கொள்ளுமாம் திணறாது
தீண்டிய காமம்....
தீரும் வரை தாண்டவமாடுமாம்

மறுக்க முடியா இயற்கையிது
மனக் கட்டுப்பாட்டின் பயிற்சியில்
மனிதனாய் நிலைத்திட
சூழலிங்கு காரணமாகிறது..

மறந்துவிட்ட இறைபக்கதியும்
மழுங்கிவிட்ட புத்தியும்
மாந்தரென்று மறந்து - காமத்திற்கு
மிருகங்களாய் மாறுமுலகமின்று

உலகத்து வரலாறு
கண்டிராத சம்பவங்கள்
சாதனைகளாய் அரங்கேறி
சமகாலச் சரித்திரங்களாய்
எதிர்காலம் நோக்கி பதிவேறுகிறது

காமத்தின் உரங்களாய்
தொழில்நுட்ப மாற்றங்களும்
பாதுகாவலற்ற வளர்ப்புகளும்
மனஓட்டங்களின் சமநிலையும்
தனிமையின் வரவேற்புகளுமென
நிலைத்துவிட்டன....



காமத்தின் காந்தங்களாய்
அரைகுறை ஆடைகளும்
ஆபாசக் காட்சிகளும்
உறுதியற்ற சட்டங்களும்
சலுகைகளின் அங்கீகாரகளுமென
இன்னுமின்னும் மெருகேற்றுகிறது

ஆணெனும் உனக்கு
அற்ப காமத்தின் வாயிலாக
அரிப்பெடுத்த தென்றலைந்து
அரிகிலுள்ள எதிர்ப்பாலாரை
சேதனம் செய்து
சலனம் தீர்க்க முனைகிறாய்

ஆறறிவு கொண்ட மனிதா
சூழலை காரணங்காட்டி
காமசூரனாய் மாறுகின்றாய்
உனைப்படைத்த இறைவன்(கடவுள்)
உனைப் பார்த்த வண்ணமிருக்கிறான்
ஒரு நொடியிலும் மறந்திடாதே....

ஐந்து நிமிட இன்பத்திற்காய்
அறிவிழந்து திரியாதே....
காமவலிதீர்க்கக் கருவியாய்
திருமணத்தைத் தேர்ந்தெடுத்துக்கெள்
அனர்த்தங்காணும் இயற்கையும்
உன்னால் சாந்திபெறும்....

நேசமுடன் ஹாசிம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :