சவூதி:தமாம் சிறையில் இலங்கையர்கள் உண்ணாவிரதம்

சவூதி அரேபியாவின் தமாம் நகரில் சிறை தண்டனை அனுபவித்துவரும் இலங்கை கைதிகள் பலர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக தமாம் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் தெரியவருவதாவது, தமாம் நகரில் 'நைன்டிவன்' சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்துவரும் 46 இலங்கை கைதிகள் தம்மை உடனடியாக இலங்கைக்கு திருப்பியனுப்பக்கோரி உண்ணாவிரதம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். பல மாதங்களாக சிறைவாசம் அனுபவித்துவரும் இவர்களை சவூதி சிறைச்சாலை அதிகாரிகள் மோசமான முறையில் நடத்துதாக சிறை கைதியொருவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் விபரிக்கையில், ' எங்களை இந்த நாட்டுக்கு அனுப்பிய முகவர் நிலையங்கள் இதற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும். எங்களுக்கு கொளுத்த சம்பளம் தருவதாக கூறி இங்கு அழைத்து வந்தனர். எனின்னும் இங்கு தொழிலொன்றோ தங்குவதற்கு இடமொன்றோ எமக்கு இல்லை. இச்சிறையில் உள்ள ஏனையவர்களின் நிலைமையும் இது தான். கால எல்லை முடிவதற்கு நெருங்கும் போது எங்களை பிடித்துவந்து சிறையில் தள்ளுகின்றனர்.


எந்தவிதமான தவறும் செய்யாத சிலரும் இருக்கிறார்கள். பொய் கூறி சிறையில் தள்ளப்பட்டிருக்கிறார்கள். சம்பளம் கொடுக்க முடியாத போது பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி சிறையில் அடைக்கின்றனர். இலங்கையில் உள்ள முகவர்நிலையங்களுக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்ட போதும் எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. இந்திய, நேபாள, பாகிஸ்தானிய முகவர் நிலையங்கள் சுகயீனம் ஏற்படும் பட்சத்தில் சிகிச்சை அளிக்கின்றன. எனினும் எமது நாட்டு முகவர் நிலையங்கள் ஒரு சொட்டு தண்ணீரேனும் தருவதில்லை.எனக்கு சுகயீனம் ஏற்பட்டது. அதற்கு அவர்கள் நன்றாக தண்ணீர் பருகுமாறு பொறுப்பில்லாமல் பதிலளித்தனர். நாம் எம்மை உடனடியாக காப்பாற்றி நாட்டுக்கு அழைத்து வருமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கிறோம் ' என தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :