கட்சி, நிறம் பேதங்களை மறந்து கைகோர்ப்போம் - பிரதமர்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டில் நிலையான அபிவிருத் தியை பலப்படுத்தும் நோக்குடன் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளார்.

தொடர்ந்தும் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு ஜனாதிபதி உட்பட இந்த அரசு செயலாற்றுகிறது.

பிரதமர் டி. எம்.ஜயரத்ன விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நிறைவேற்ற முடியாத எதிர்பார்புகளையும், இலக்குகளையும் புத்தாண்டில் வெற்றி கொள்வது எமது ஒரே நோக்காகும்.

பெளதீக ரீதியிலான துரித வளர்ச்சியை நோக்கி நாம் சென்றாலும் தார்மீக, ஆன்மீக மேம்பாட்டை மனங்களில் உருவாக்குவது எமது பிரதான எதிர்பார்ப்பாகும்.

நிலையான சமாதானத்தை உருவாக்கி இலங்கையர்களுக்கு புதுவருடத்தில் ஐக்கியப்பட்டு செயற்பட்டு நாட்டின் எதிர்காலத்தை பாதுகாக்கும் பொறுப்பு சாட்டப்பட்டுள்ளது.

இதற்காக கட்சி, நிறம் பேதங்களை மறந்து கைகோர்க்க வேண்டும். நாடு ஐக்கியப்படும் போது சகல சதிகளையும் முறியடிக்கும் பலம் எமக்கு வரும்.

எம்முன் பல சவால்களை உள்ளன. சவால்களை வெற்றி கொள்ள தேவைப்படும் வசதிகள் வழங்க அரசு ஏற்கனவே நடிவடிக்கை எடுத்துள்ளது.

ஆசியாவில் ஆச்சரியமிக்க பயணத்தை நோக்கி நாம் செல்லும் போது 2013 ஆம் வருடம் தீர்க்கமான ஓர் ஆண்டாக அமையும். இவ்வாறு பிரதமர் கூறியுள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :