(எஸ்.எம்.அறூஸ்)
அட்டாளைச்சேனை பிரதேச மக்களின் நலன் கருதி அட்டாளைச்சேனை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினால் கோப் சனலிங் என்ற பெயரில் வைத்திய சேவையினை நாளை சனிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அட்டாளைச்சேனை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் எஸ்.எல்.சனூஸ் தலைமையில் நடைபெறவுள்ள ஆரம்ப நிகழ்வில் கூட்டுறவுத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
அட்டாளைச்சேனை பிரதான வீதியில் அமைந்துள்ள பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் புதிய கட்டடத்தில் இச்சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. இப்பிரதேச மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வந்த சனலிங் வைத்திய சேவை சனிக்கிழமை முதல் நிவர்த்தி செய்யப்படுகின்றது.
இங்கு பொது வைத்திய நிபுணர்கள் சேவை, மகப்பேறு பெண் நோயியல் சேவை, குழந்தை மருத்துவ சேவை, சத்திரசிகிச்சை நிபுணர்கள் சேவை, என்பு முறிவு சிகிச்சை, தோல் சிகிச்சை, கதிரியக்கவியல், கண் வைத்திய சேவை, காது, மூக்கு, தொண்டை Nவை, இருதய சேவை, மனநல Nவை, இயன் மருத்துவர், பல் வைத்தியர்கள் சேவை என வைத்திய நிபுணர்களைக் கொண்டு சிகிச்சைகள் அளிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment