திருக்கோவில் வட்டமடு வயலில் 'களை' பிடுங்கிகொண்டிருந்த மூன்று பெண்களை ஒரு குழுவினர் தாக்கி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முற்பட்டுள்ளனர்.
அந்த பெண்கள் மூவரும் எழுப்பிய அபாய குரலையடுத்து விரைந்து வந்த பிரதேசவாசிகள் வல்லுறவுக்கு முயற்சித்தோர் மீதுமேற்கொண்ட தாக்குதலில் அந்த மூவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று செவ்வாய்கிழமை காலையில் இடம்பெற்றுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர் .
இது தொடர்பாக தெரியவருவதாவது
ஆலையடிவேம்பு மகாசக்தி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளிகளான மூன்று பெண்கள் வழமைபோல சம்பவதினம் காலையில் வட்டமடு வயல் பிரதேசத்து வயலில் புல்புடுங்கிக் கொண்டிருந்துள்ளனர்.
அந்த சந்தர்ப்பத்தில் அங்கு வந்த 4 பேர் கொண்ட குழுவினர் பெண்களைத்தாக்கி பாலியல் வல்லுறவுக்கு ஈடுபடமுற்பட்டுள்ளனர்
இதணையடுத்து பெண்கள் கூச்சலிட்டு கத்தியதையடுத்து வயலில் வேளாண்மை நடவடிக்கையில் ஈடுபட்டவர்களும் அக்கம்பக்கத்தைச் சேர்ந்தவர்களும் சென்று பெண்களைத் தாக்கிய குழுவினரை தாக்கியதையடுத்து அவர்கள் தப்பிஓடியுள்ளனர்.
இந்நிலையில் பலத்த காயமடைந்த பெண்களை திருக்கோவில ;வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் .
இந்த குழுவினர் மதுபோதையில் வந்ததாகவும் இவர்கள் சகோதர இனத்தை சேர்ந்தவர்கள் எனவும் பொலிசாரின் ஆரம்பவிசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :
Post a Comment