எதிர்வரும் எட்டாம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள திவிநெகும சட்டமூலத்துக்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பதைத்தீர்மானிக்கும் மு.கா.வின் உயர்பீடக் கூட்டம் கட்சியின் உயர்பீடமான தாருஸ்ஸலாத்தில் நேற்று மாலை 5.30 மணியிலிருந்து இரவு 10.30 மணிவரைத்தொடர்ந்தது. இக்கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக மு.கா.வின் செயலாளர் நாயகம் ஹஸனலி எம்.பி. தெரிவித்தார்.
இது தொடர்பில் ஹஸனலி எம்.பி.மேலும் தெரிவிக்கையில், திவிநெகும சட்டமூலம் தொடர்பில் மு.கா.முன்வைக்கும் தீர்மானங்களை அரசாங்கம் ஏற்றுக்கொண்டால் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கவுள்ளோம். எவ்வகையான திருத்தங்களை முன்வைப்பது தொடர்பில் நாளை (இன்று) கூடி ஆராயவுள்ளோம். நாளைய கூட்டத்தில் (இன்று) தீர்மானிக்கும் திருத்தங்கள் சம்பந்தமாக கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அரசாங்க தரப்போடு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் எனவும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment