காரைதீவு பிரதான தபாலகத்தின் கணணி பழுதடைந்த நிலைமையில் கடந்த 03 மாத காலமாக பாவனையில் இல்லை.


(எம்.பைஷல் இஸ்மாயில்)

காரைதீவு பிரதான தபாலகத்தின் கணணி பழுதடைந்த நிலைமையில் கடந்த 03 மாத காலமாக பாவனையில் இல்லை. எனவும் இதனால் பொதுமக்கள் பாரிய சௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாவும் பிரதேச வாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடந்த மூன்று மாதகாலமாக பொதுமக்கள் தங்களின் மின்சாரக் கட்டணம், குடிநீர் கட்டணம், தொலைபேசிக் கட்டணம் என பலவகை கட்டணங்களை செலுத்தும் செயற்பாடுகளில் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பிட்ட கட்டணங்களை செலுத்துவதற்காக சாய்ந்தமருது, கல்முனை ஆகிய பிரதேசங்களுக்குச் சென்றுவருவதாவும், இதனால் பல மணிநேரங்கள் செலவிட வேண்டியுள்ள நிலைமைக்க ஆளாகியுள்ளனர்.

இந்த நவீன காலத்தில் இருந்து கொண்டு இவ்வாறு செயலற்றக் காணப்படும் கணனிகளைத் திருத்திக் எடுக்க 3 மாதங்கள் கடந்தும் அவற்றை சீர் செய்யாமல் மிக அசமந்தப்போக்கில் இருக்கும்  அதிகாரிகள் மீது பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.


எனவே பழுதடைந்து காணப்படும் கணணி விவகாரம் தொடர்பாக உயர் அதிகாரிகளான தபாலதிபர் ஏ.அலியார் மற்றும் கிழக்கு மாகாண பிரதி தபால் மாஅதிபர் கே.விமலநாதன் ஆகியோர் பொதுமக்களின் அசௌகரியங்களை கவனத்திற் கொண்டு செற்பட முயற்சிக்கவேண்டும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :