இலங்கை வரலாற்றில் 04 நாள் தொடர்ச்சியான ஹர்த்தால் பொத்துவில் நகரில் முஸ்லிம்களுக்கு நியாயம் கிடைக்குமா..?




பொத்துவில் மக்களின் இன்றைய நிலை????

இலங்கையில் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்ககூடிய தொழில் முறைகள் மற்றும் மூவின மக்கள் வாழக்கூடிய வந்தோரை வாழ வைக்கும், விருந்தோம்பலில் பெயர் பெற்றதுமான அனைத்து இயற்கை வளங்களும் கொண்டு காணப்படும் ஒரு முஸ்லிம் கிராமமே பொத்துவில்.
இது கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ளது.

அண்மைக்காலமாக பொத்துவில் நகரில் பாரிய நிலஆக்கிரமிப்புக்கள் மற்றும் & சிலை வைத்தல் அதிவேகமாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

பொத்துவிலில் மண்மலை பிரதேசத்தில் 200அடி உயரமான சிலை வைக்க ஏற்பாடுகள் நடந்த வண்ணம் உள்ளன. 


இதனை முஸ்லிம் அமைச்சர்கள்.& பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் முறையிட்டும் கூட பலன் எதுவும் கிடைக்கவில்லை. 

வருகின்ற 22ம் திகதி ஜனாதிபதி பொத்துவில் மண்மலை இல் 200 அடி உயரமான புத்தர் சிலை அடிக்கல் நாட்டுவிழாவுக்கு வருகின்றார். 


இதனை முன்னிட்டு அகில இலங்கை பள்ளிவாயல்கள் சம்மேளனம் & ஜமியதுல் உலமா என்பன எடுத்த முடிவுகளின் அடிப்படையில் பொத்துவில் பள்ளிவாயல்கள் மூலமாக இன்று 7.30 மணிக்கு பொத்துவில் மக்களுக்கு 04 நாட்கள் ஹர்த்தாலை அனுஷ்டிக்குமாறும் இந்த 04 நாட்களுக்கு தேவையான பொருட்களை சந்தையில் இருந்து கொள்வனவு செய்யுமாறும் 21-24 திகதிகளில் கடைகள் & அரச அலுவலகங்கள் மூடப்படும் என்றும் அனைத்து பள்ளிவாசல்களிலும் தெரிவிக்கப்பட்டது.


(பொத்துவில் உலமாசபை.. ஊடாக பெளமி.)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :