"எல்லோருக்கும் வசந்தம்" மஹிந்த சிந்தனையில் 100 வீட்டுத்திட்ட தொகுதி, பல்தேவைக் கட்டிடம்.


 (அகமட் எஸ். முகைடீன்)

"எல்லோருக்கும் வசந்தம்" மஹிந்த சிந்தனை திட்டத்தின் கீழ் கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத அமைச்சினால் நடைமுறைப் படுத்தப்படுகின்ற சுனாமிக்குப் பின்னரான கரையோர புனர்நிர்மான வளங்களின் முகாமைத்துவ செயற்திட்டத்தில் சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் இபாட் நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்ட100 வீட்டுத்திட்ட தொகுதிபல்தேவைக் கட்டிடம்சுய தொழில் விற்பனை நிலையம் என்பன திறந்து வைக்கும் நிகழ்வும் இன்று (23.03.2013) சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் நடைபெற்றது.

குறித்த வீடுகள் மற்றும் சுய தொழில் விற்பனை நிலையம் என்பன  கடந்த சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.

இபாட் நிறுவனத்தின் தேசிய நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் பிரதாப் சிங் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் வைத்திய கலாநிதி ராஜித சேனாரத்ன பிரதம அதிதியாகவும்கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி பிரதியமைச்சர் சரத்குமார குணரத்னகிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத்கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை, கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப்,கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம்.ஜெமீல்ஆரிப் சம்சுதீன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் மற்றும் கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் உயர் அதிகாரிகள்பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.


இதன்போது அம்பாறை மாவட்டத்திலுள்ள மீனவ குடும்பங்கள் 500 பேருக்கு ஒரு லட்சம் ரூபா வீதம் சுயதொழில் கடனுக்கான காசோலை அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.

கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சு இவ்அபிவிருத்தி திட்டங்களுக்கு 62 மில்லியன் ரூபாவினை செலவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :