அமெரிக்காவில் உள்ள மிசெளரி மாவட்டத்தில் உள்ள ஒரு பாடசாலையில் படிக்கும் 13 வயது மாணவிக்கு மார்பகத்தை சிறிதாக்க செய்யும் அறுவை சிகிச்சை செய்ய பாடசாலை நிர்வாகம் கட்டாயப்படுத்தியதாக மாணவியின் தாய் முறைப்பாடு தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் சென்றல் மிடில் பாடசாலையில் 6ஆம் தரத்தில் படித்து வருகிறார் இந்த மாணவி. அவருக்கு வயது மீறிய பெரிய மார்பகம் இருப்பதால் சக மாணவர்களால் கேலி மற்றும் கிண்டலுக்கு உட்படுவதால், பாடசாலை நிர்வாகம், மாணவியின் தாயாருக்கு போன் செய்து மாணவியின் மார்பகங்களை சிறிதாக்க அறுவை சிகிச்சை செய்யுமாறு கூறியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தாயார் பாடசாலை நிர்வாகம் மீது முறைப்பாடு கொடுத்துள்ளார்.
கேலி செய்யும் மாணவர்களை கண்டிக்க நடவடிக்கை எடுக்காமல் தனது மகளின் மார்பகங்களை சிறிதாக்க அறுவை சிகிச்சை செய்ய பாடசாலை நிர்வாகம் கட்டாயப்படுத்தியதாக கூறிய புகாரை மறுத்துள்ள பாடசாலை நிர்வாகம், தாங்கள் அறுவை சிகிச்சையை ஒரு ஆலோசனையாகத்தான் கூறியதாகவும், கட்டாயப்படுத்தவில்லை என்றும், மேலும் மாணவியை கேலி செய்த மாணவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் விளக்கம் கூறியுள்ளது.
tcnn
0 comments :
Post a Comment