170 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கல்லடி புதிய பாலம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு.


-KRM.றிஸ்கான்-

இலங்கையின் மிகப் பெரிய வாவியான மட்டக்களப்பு வாவியில் மஹிந்த சிந்தனையின் வழிகாட்டலில் 1970 மில்லியன் (170 கோடி) ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கல்லடி புதிய பாலத்தை  வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக மக்கள் வசம் கையளித்தார்.

289 மீற்றர் நீலமும் 14 மீற்றர் அகலமும் கொண்ட கிழக்கையும் தெற்கையும் இணைக்கும் மட்டக்களப்பு கல்லடி புதிய பாலத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வைபவ ரீதியாக இன்று 04.30 மணியளவில் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் திட்ட அமைச்சர நிர்மல கொதலாவ, இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் நொபுஹித்தோ ஹோபோ, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத், உற்பத்தித் திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பஸீர் சேகுதாவூத், மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், திணைக்கள அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த பாலம் மட்டக்களப்பு மாவட்டத்தையும் அம்பாறை மாவட்டத்ததையும் இணைக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கையின் மிக நீளமான இரும்பு பாலம் என்று அழைக்கப்படும் கல்லடி பாலம் சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலேயர் ஆட்சியில் நிர்மாணிக்கப்பட்டது.

50 வருட கால உத்தரவாதத்தின் பேரில் நிர்மாணிக்கப்பட்ட இந்த பாலம் 75 ஆண்டுகளுக்கு மேல் பாவனையிலுள்ளது. இது சேதமடைந்து வருவதனாலேயே அதன் அருகில் புதிய பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.




தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்திக் கண்காட்சி நாளை அம்பாறையில் இடம்பெறவுள்ளதால் பால நிர்மாண வேலைகள் துரிதமாக்கப்பட்டு இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :