வரலாற்றில் முதல் முறையாக கமு.திகோ.பாணமை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில்இல்ல மெய்வல்லுர் விளையாட்டுப்போட்டி – 2013


இப்பாடசாலை பல்வேறு காரணங்களால் மூடப்பட்டிருந்து 2001 முதல் திருமதி.எஸ்.சோபியாதர்மதாச அவர்களால் பொறுப்பேற்கப்பட்டு இன்று தரம் 1 தொடக்கம் 11 வரையான வகுப்புக்களில் 103 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

கிழக்கு மாகாணத்தின் கடைசி எல்லைக் கிராமமான பாணமை கிராமத்தில் அமையப்பெற்ற இப்பாடசாலை கல்முனைக் கல்வி மாவட்டத்தின் திருக்கோவில் கல்வி வலயதிற்குட்பட்ட பாடசாலைகளுள் அதிகதூரத்திலுள்ள பொத்துவில் கோட்டத்தின் அதிகஸ்டப் பிரதேசப் பாடசாலையாகும். இதில் தற்பொழுது 9 ஆசிரியர்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் சென்று கற்பித்து வருகின்றனர்.

இவ்வருடம் விளையாட்டு நிகழ்வு ஒன்று நடாத்துவதற்கான ஆசிரியர்களின் ஆலோசனையின்படி அதிபரால் பெற்றோருடன் கலந்துரையாடுவதற்கான விஷேட கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக பெற்றோர்களிலிருந்து விளையாட்டுக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. மாணவர்கள் இரு இல்லங்களாக பிரிக்கப்பட்டு நாவலர், பாரதியார் ஆகிய நாமங்கள் சுட்டப்பட்டது ஆசிரியர்களும் பொறுப்பாக்கப்பட்டனர். 

இப்பொழுது கற்பிக்கும் ஆசிரியர்hளான திரு.க.மு.கி.ரூபன், திரு.ம.ஹரிராஜ், திரு.ரி.சத்தியசீலன், திரு.கி.கிருதாஸன், திரு.ஏ.ஜெகநாதன், திரு.பி.சுசந்தவிஜயசிறி, திரு.என்.லோகநாதன்திருமதி.எஸ்.லூசியா, திருமதி.கோகிலா அஜந்த ஆகியோரின் அயராத முயற்சியின் பலனாக இப்பாலையின் வரலாற்றில் முதல் முறையாக அதிபர், சிரியர்கள்(2013) பெற்றோர்களின் முழுஆதரவுடன் இல்ல மெய்வல்லுர் விளையாட்டுப்போட்டி 2013.03.07 ஆம் திகதி அதிபர் திருமதி.எஸ்.சோபியாதர்மதாச அவர்களின் தலைமையில் பாணமை பொது மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பொத்துவில் கோட்டக் கல்விப்பணிப்பாளர் திரு.வ.ஜெயந்தன் அவர்கள் கலந்து சிறப்பித்ததோடு, கௌரவ அதிதியாக வைத்தியர் டி.எ.எ. வீரசிங்க அவர்கள் கலந்து கொண்டார். விஷேட அதிதிகளாக லகுகல தவிசாளர் திரு.ஆர்.சந்திரசேன, முன்னாள் தவிசாளர் ஜே.எஸ்.டி.உம். நிரோசன் குமார திரு.வி.எஸ்.எம்..சந்திரரத்ன, முப்படைகளின் பாணமை பகுதி பொறுப்பதிகாரிகள், பாணமை பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோரும் சிறப்பு அதிதிகளாக வண.வீ.கணோசமூர்த்தி அவர்களும் சித்தி விநாயகர் ஆலயம் பாணமை, திரு.எஸ்.புனிதராஜன் பொது சுகாதாரஉத்தியோகத்தர் மற்றும் பாணமை கிராமசேவகர்களான திருமதி.ஜி.ஞானவெத்திதிருஆர்.ரணசிங்க, திரு.எஸ்.எம்.ரத்னபால ஆகியோரும் லகுகல பிரதேச சபை உறுப்பினர்களான திருமதி.கே.லலித்குணநாயக்க திரு.ஜி.விமலசேன ஆகியோரும் நடுவர்களாக ஆசிரியர்கள் திரு.உ.காண்டீபன், திரு.அ.மனோரன், திருமதி.எஸ்.கோமதி ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

பாணமை வரலாற்றில் தடம் பதிக்கப்பட்ட நிகழ்வுகளாக அதிதிகள் வரவேற்பு மங்கள விளக்கேற்றல், இறைவணக்கம், ஒலிம்பிக் தீபடீமற்றல், சத்தியப்பிரமாணம், விளையாட்டு நிகழ்வுகள், அதிதிகள் உரைஇல்லங்கள் பார்வையிடல் பெற்றோரின் நிகழச்சி, பரிசு வழங்கல், பாடசாலைக்கீதம், தமிழ்தாய் வாழ்த்து என்பனவற்றுடன் அனைத்து நிகழ்வுகளும் இனிது நிறைவு பெற்றது.

தகவல் :- சுரேன் விநாயகபுரம்  திருக்கோவில்
   






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :