2013 தேசத்துக்கு மகுடம் கண்காட்சியை முன்னிட்டு அம்பாறையில் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்


(எம்.பைஷல் இஸ்மாயில்)

2013 தேசத்துக்கு மகுடம் கண்காட்சியை முன்னிட்டு அம்பாறையில் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மிகத் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எதிர்வரும் 23 ஆம் திகதி சனிக்கிழமை அம்பாறையில் ஆரம்பிக்கவுள்ள 2013 தேசத்துக்கு மகுடம் கண்காட்சி இம்மாதம் 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை இடம்பெறவுள்ள இந்த கண்காட்சி அம்பாறை ஹாடி தொழில் நுட்பவியல் கல்லூரியில் ஒரு வாரகாலத்துக்கு இடம்பெறவுள்ளன.

இக்கண்காட்சியையெட்டி அம்பாறையிலிருந்து செல்லும் கல்முனை, அக்கரைப்பற்று, கண்டி ஆகிய பிரதான வீதிகள் மற்றும் உள்ளக வீதிகள் யாவும் காபட் வீதிகளாக மாற்றியமைக்கப்பட்டு வருவதோடு, அம்பாறை ஹாடி தொழில் நுட்பவியல் கல்லூரி மற்றும் அதைச் சூழவுள்ள பகுதியில் பல அபிவிருத்திப் பணிகள் மிகத்துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அம்பாறை ஹாடி தொழில் நுட்பவியல் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் இந்த 2013 தேசத்துக்கு மகுடம் கண்காட்சியை ஆரம்பித்து வைப்பதற்காக நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும். 






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :