இலங்கை கல்வி மற்றும் அபிவிருத்திக்கான முஸ்லிம் மாணவர் அமைப்பு (ஒம்சட் சிறிலங்கா) நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 300 முஸ்லிம் இளைஞர்களை ஒன்று திரட்டி ' தாய் நாட்டைக் கட்டியெழுப்புவோம் வளப்படுத்துவோம்' எனும் தொனிப் பொருளில் இன்று (16.03.2013) கொழும்பு தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் இளைஞர் மாநாட்டினை நடாத்துகின்றது.
இளைஞர்கள் ஒரு நாட்டின் பெறுமதியான சொத்துக்கள். அவர்களை ஆக்கபூவமான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி வளமான எதிர்காலமொன்றிற்கு வழிகாட்டுவதுடன் அவர்களது உணர்வுகளை சிறந்த முறையில் நெறிப்படுத்துவதும், எதிர்காலம் பற்றிய நம்பிக்கை உணர்வினையும், வெற்றி மனப்பாங்கினையும் ஏற்படுத்துவதுடன், இளைஞர் செயற்பாடுகளை பாராட்டி கௌரவிப்பதும் இம் மாநாட்டின் மிக முக்கியமான நோக்கமாகும்.
இவ்வருடம் க.பொ.த (உ/த) பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் முதலிடத்தினைப் பெற்ற மாணவர்கள் பாராட்டி கௌவரவிக்கப்படுவதுடன், ஒம்செட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர்களது சேவைநலன் பாராட்டும், மாணவர்களது கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறவிருக்கின்றது.
அமைப்பின் தலைவர் அலவி தலைமையில் நடைபெறும் இம் மாநாட்டிற்கு பிரதம அதிதிகளாக முஸ்லிம் சமய மற்றும் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க். ஆ.ர்.ஆ. ஷமீல் மற்றும் சிரேஷ்ட ஒளிபரப்பாளர் டீ.ர்.அப்துல் ஹமீட் ஆகியோரும் விஷேட அதிதிகளாக முன்னாள் இலங்கை உதைப்பந்தாட்ட கழகத் தலைவர் ஆ. அமானுல்லா, மேர்சி லங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஹஸன் நஸ்ர், வாமி நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் உமர் இத்ரீஸ், ஸலாமா நிறுவனத்தின் தலைவர் நியாஸ் மொஹிதீன், ஆகுஊனு பணிப்பாளர் சபை உறுப்பினர் சைபுல் இஸ்லாம் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கின்றார்கள். என ஒம்செடடின் உப தலைவர் மனூஸ் அபூபக்கர் தெரிவித்தார்.
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
முக்கிய குறிப்பு :
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment