துபாயில் 300 இற்கு மேற்பட்ட இளம்பெண்கள் விபச்சாரத்தில்! - கேரள நீதிமன்றம்.



வேலை வாங்கித் தருவதாக கூறி, 300 இளம் பெண்களை, துபாய்க்கு அழைத்து சென்று, விபசாரத்தில் தள்ளியது தொடர்பாக, வெளியுறவு துறையிடம், கேரள ஐகோர்ட் விளக்கம்கேட்டுள்ளது.

கேரளா, பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த, இளம்பெண் ஒருவரை, ஐக்கிய அரபு குடியரசு நாடுகளில் ஒன்றான, ஷார்ஜாவில், வீட்டு வேலையாள் பணிக்கு சேர்த்து விடுவதாகக் கூறி, சிலர் அழைத்துச் சென்றனர். அங்கு உறுதி அளித்தபடி, வேலை தராமல், விபசாரத்தில் தள்ளினர்.

எப்படியோ, விபசார கும்பலிடமிருந்து தப்பி, சொந்த ஊர் திரும்பிய அந்தப் பெண், தன்னைப் போல, துபாய் மற்றும் ஷார்ஜாவில் வேலை வாங்கித் தருவதாக கூறி, அழைத்துச் செல்லப்பட்ட, கேரளாவைச் சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட இளம்பெண்கள், விபசாரத்தில் தள்ளப்பட்டு, கொடுமை அனுபவிப்பதாக தெரிவித்தார்.

"அந்தப் பெண்களை விபசார கும்பலிடம் இருந்து மீட்டு, கேரளாவுக்கு அழைத்து வரும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்' எனக் கோரி, கேரள ஐகோர்ட்டில், அந்தப் பெண் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, கேரள ஐகோர்ட், "டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான, கேரள உள்துறை முதன்மை செயலர் சாஜன் பீட்டர் கூறியதாவது:
அரபு நாடுகளில், சிக்கியுள்ள பெண்களின் பெயர்களோ, விலாசமோ எதுவும் இல்லை. அவர்களை சட்டத்திற்கு புறம்பான பணிகளில் ஈடுபடுத்தியுள்ள நபர்கள் குறித்தும், விவரங்கள் தரப்படவில்லை.

இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக, வெளியுறவு அமைச்சகம் மூலமாக, துபாயிலுள்ள, இந்திய துணை தூதரகத்தை, கேரள அரசு தொடர்பு கொண்டு பேசியுள்ளது.

துபாயில், கேரளாவைச் சேர்ந்த, 300 இளம் பெண்கள், விபசாரத்தில் தள்ளப்பட்டு, கொடுமை அனுபவித்து வருவதாக, கேரள நுண்ணறிவுப் பிரிவு, கூடுதல் டி.ஜி.பி.,க்கும், அனாமதேய கடிதம் ஒன்று வந்தது.

அதனடிப்படையில் நடத்திய விசாரணையிலும், முன்னேற்றம் ஏற்படவில்லை. ஆனால், வெளிநாட்டில் உள்ள சிலரது தொலைபேசி எண்கள் மட்டும் கிடைத்தன. அதை வைத்து, விசாரணை நடத்த இயலாது என, துபாயிலுள்ள இந்திய துணை தூதரகம் தெரிவித்து விட்டது.

இவ்வாறு சாஜன் பீட்டர் கூறினார்.

இதையடுத்து, "இந்தப் புகார்கள் தொடர்பாக, வெளியுறவு துறை, இதுவரை நடத்திய விசாரணை விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்' என, உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர். -

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :