அணு உலையை மூடக்கோரி 4 இடங்களில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.


kudankulam-plantஅணு உலையை மூடக்கோரி கூடங்குளம் போராட்ட குழுவினர் நாளை 4 இடங்களில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதையொட்டி 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உள்ள முதல் அணு உலையில் ஏற்பட்ட கசிவு குறித்தும், மத்திய அமைச்சர் நாராயணசாமியின் முன்னுக்கு பின் முரணான அறிக்கையால் ஏற்பட்ட குழப்பங்கள் குறித்தும் மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று போராட்டக்குழு கோரி வருகிறது.
ஆனால் இதுவரை அரசு வெள்ளை அறிக்கை குறித்து பதில் இல்லை. இதனை கண்டித்து தூத்துக்குடி துறைமுகம், கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம், விவேகானந்தர் பாறை மற்றும் கூடங்குளம் அணு உலை ஆகிய 4 இடங்களில் கடந்த பிப் 15ம் தேதி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று போராட்டக்குழுவினர் அறிவித்திருந்தனர். இதில் தூத்துக்குடி துறைமுகம் மற்றும் கூடங்குளம் அணு உலையை கடல் வழியாகவும், தரை வழியாகவும் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 11ம் தேதி வங்க கடலில் ஏற்பட்ட சூறைகாற்றால் படகுகள் பழுதானதால் இந்த போராட்டம் பிப் 27ம் தேதி ஓத்தி வைக்கப்பட்டது. அன்றைய தினம் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்ததால் பிப் 27ம் தேதி நடைபெற இருந்த போராட்டமும் ஓத்தி வைக்கப்பட்டது.
பின்னர் இந்த முற்றுகை போராட்டம் மார்ச் 11ம் தேதி நடக்கும் என்று போராட்டகுழு ஓருங்கிணைப்பாளர் அறிவித்திருந்தார். இதையொட்டி நாளை 4 இடங்களில் முற்றுகை போராட்டம் நடக்கிறது. இதனால் இந்த 4 பகுதிகளிலும் பதற்றம் நிலவி வருகிறது. இதையடுத்து ஏற்கனவே கூடங்குளம் அணு உலை பாதுகாப்பு பணியில் இருந்த 1500 போலீசாரும், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், தேனி, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலிருந்து 2500 போலீசார் என மொத்தம் 4 ஆயிரம் போலீசார் நெல்லை சரக டிஐஜி சுமித் சரண் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :