வவுனியாவில் ' நாமல்' என்ற பெயரில் கிராமம் 5000 சிங்கள குடும்பங்களை குடியமர்த்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன- ஆசாத் சாலி

TM- வடக்கு-கிழக்கு இராணுவமயம் மட்டுமல்ல சிங்களமயமாக்கப்பட்டு வருகின்றமை நாளுக்கு நாள் உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றது. வடக்கு மக்கள் இன்னும் அச்சத்துடனேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். வவுனியாவில் ' நாமல்' பெயரில் கிராமம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கிராமம் எதற்கு என்று முஸ்லிம் - தமிழ் அமைப்பின் தலைவர் அஸாத் சாலி கேள்வி எழுப்பினார்.

அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம் எனும் தொனிப்பொருளில் கொழும்பிலுள்ள அஸாத் சாலி மன்றத்தில் இன்று  நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

வடக்கிற்கு நான் சென்றிருந்த போது அங்குள்ள மக்கள் எவ்வளவு அடக்கு முறைக்குள் சிக்கியிருக்கின்றார்கள் என்பதனை புரிந்து கொண்டேன். மக்களிடம் வெளிப்படையாக பேசமுடியவில்லை என்றும் அவர் சொன்னார்.

எங்களை கண்டதும் பலர் தங்களுடைய வீட்டின் கதவை அடைத்துக்கொண்டனர். இராணுவத்திற்கும் புலனாய்வு துறையினருக்கும் அஞ்சியே அவர்கள் இவ்வாறு செய்ததாக எங்களுக்கு தெரிவித்தனர்.

வடக்கை சிங்களமயமாக்கும் முயற்சிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. வவுனியாவில் 5000 சிங்கள குடும்பங்களை குடியமர்த்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வவுனியாவில் 'நாமல் கிராமம்' எனும் பெயரில் கிராமம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டையைச்சேர்ந்த சிங்கள மக்களே அந்த 'நாமல் கிராமத்தில்' குடியமர்த்தப்படவிருக்கின்றனர். முதற்கட்டமாக 1000 சிங்கள குடும்பங்கள் குடியமர்த்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வவுனியாவில், ஹம்பாந்தோட்டை சிங்களவர்களை குடியேற்றிவிட்டு ஹம்பாந்தோட்டையை சீனாவுக்கு தாரைவார்ப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது என்றும் அவர் சொன்னார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :