(TN) பிரான்ஸில் முஸ்லிம் பெண்ணில் முகத்தை மூடிய பர்தாவை அகற்ற முற்பட்டவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்ட 5 மாத சிறைத் தண்டனை விதித்துள்ளது.
தமது நாட்டு சட்டத்தை அமுல்படுத்தவே முயற்சித்ததாக பர்தாவை அகற்ற முயன்ற 30 வயது இளைஞன் குறிப்பிட்டுள்ளார். ஆனால் சாதாரண பிரஜைகள் சட்டத்தை தனது கையில் எடுக்கக் கூடாது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்துடன் ஒரு கண்காணிப்பாளர் போன்று பெண்ணின் நம்பிக்கைக்கு எதிராக செயற்பட்டிருப்பதாகவும் நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இதில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நஷ்டஈடு வழங்கும்படியும் மேற்படி இளைஞனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி நிகொலஸ் சார்கோசியின் அரசினால் கடந்த 2011 ஆம் ஆண்டு அமுல்படுத்தப்பட்ட சட்டத்தில் பொது இடத்தில் பெண்கள் முகத்தை மறைக்கும் வகையில் பர்தா அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் தனி மனித உரிமையான கருத்துச் சுதந்திரத்தை மீறுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம்சாட்டியுள்ளது.JM
0 comments :
Post a Comment